பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 371 சிவபக்தராக இருந்த திருவாதவூரர் இத்தகைய சம்பிரதாய பூசைகளில் ஈடுபட்டிருக்கலாம். இன்றேல், மணிவாசகராக மாறிய பிறகு ஒவ்வொரு ஊராகச் செல்லும் நிலையில் இவ்வாறு சிவபூசை செய்பவர்களைக் கண்டிருக்கலாம். இப்பொழுது அந்த நிலையை யெல்லாம் கடந்துவிட்டார் என்றாலும், இந்தப் பழமையின் தாக்கம் ஒரோவழி பாடல்களில் வெளிப்படுகிறது என்று அமைதி காண்பதில் தவறில்லை. திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெற்றுப் பலகாலம் கழிந்தபின்னர், குருந்தமரத்தடியில் குருநாதர் இருந்த நிலையை அமைதியாக இருந்து சிந்திக்கிறார் அடிகளார். அதனையே செழுமலர்க் குருந்தம் மேவிய சீர் இருந்தவாறு எண்ணி, செறா நினைந்திட்டு (467) இருந்தேன் என்கிறார். இப்பொழுது திருப்பெருந்துறையை விட்டு எங்கோ ஒர் இடத்தில் இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தில் குருந்தமரமு மில்லை, குருநாதரும் இல்லை. ஆனால், குருநாதர் இருந்த பழைய நிலையை இவர் எண்ணுகிறார் என்பதைத்தான் இருந்தவாறு எண்ணி என்று பேசுகிறார். இருந்தவாறு எண்ணி என்பதால் இது முன்னர் என்றோ ஒருநாள் நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பதாயிற்று. இப்பொழுது குருந்தமரமும் இல்லை; குருநாதரும் இல்லை. ஆனால் முன்னர் இருந்த நிலையை எண்ணி, ‘என்னுடை எம்பிரான் என்றென்று அருந்தவா நினைந்து ஆதரித்து (46) அழைக்கின்றேன் என்கிறார். இதன் துணுக்கத்தைச் சற்று நின்று நிதானித்து அறிய வேண்டும். பழைய நிலையில் திருப்பெருந்துறையில், குருந்தமரத்து அடியில் குருநாதர் வீற்றிருந்தார். மிக அருகில் அவருடைய திருவடியில் அடிகளாரின் தலை பட்டுக்கொண்டு இருந்தமையின், எம்பிரான் என்று கூவி அழைக்க வேண்டிய தேவை அன்று ஏற்படவில்லை.