பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஆனால், இன்று குருந்த மரமும் குருநாதரும் எங்கோ மறைந்துவிட்டனர். எனவே, அடிகளார் 'அருந்தவா! (நின்னை, நீ இருந்த பழைய கோலத்தை நினைந்தே ஆதரித்து அழைக்கின்றேன்' என்று கூறுகிறார். "ஐயா! இப்பொழுது நீ "அது என்ன?” என்று கேட்டுப் பயனில்லை. அப்படிக் கேட்டு எனக்கு அமைதி உண்டாக்கும் நிலை கடந்துவிட்டது. இனி நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பிறவியாகிய கடலில் சிக்கித் தவிக்கும் என்னைப் பார்த்து இதுதான் கயிலை செல்லும் வழி. இந்த வழி அறிந்து வருவாயாக என்று நீ சொல்வதையே நான் விரும்புகிறேன்’ என்கிறார். திருக்கழுக்குன்றப் பதிகம் அடிகளாரின் வாழ்க்கையில் திருக்கழுக்குன்றம், திருப்பெருந்துறை ஆகிய இரண்டு திருத்தலங்கள் திருப்பு முனையாக அமைந்தன என்று கொள்வதில் தவறில்லை. உலகியல் முறையில் மிக உன்னதமான பதவி வகித்து வாழ்க்கை நடத்தும் ஒருவரைப் பிடித்து ஆட்கொண்டு அத்தனையையும் ஒரே விநாடியில் துறக்குமாறு செய்தது திருப்பெருந்துறை. திருப்பெருந்துறையின்மேல் அடிகளாருக்கு இவ்வளவு காதல் வளர ஒரு காரணம் உண்டு. தொடர்ச்சியாகவும், ஒன்றிலிருந்து ஒன்று விளைவதாகவும் உள்ள ஒன்றைத்தான் வளர்ச்சி என்று கூறுகின்றோம். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும், அன்றாடம் சிறுசிறு வளர்ச்சியும், சில நேரங்களில் பெரு வளர்ச்சியும் தோன்றுதல் இயல்பேயாகும். இந்த வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட துறையில் சிறிதாகவும், பெரிதாகவும் வளர்கின்ற ஒன்றேயாகும். மரம் நாளும் வளர்ந்தது; குழந்தை நாளும் வளர்ந்தது என்று கூறுகையில் ஒன்று உறுதி. எவ்வளவு வளர்ந்தாலும் எந்த நிலையை அடைந்தாலும்