பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 373 மரம் மரமாகத்தான் இருக்கும்; குழந்தை மனிதனாகத்தான் வளரும். இப்படி இருந்தால்தான் அதனை வளர்ச்சி என்று கூறுகிறோம். இதன் மறுதலையாக, ஒரறிவு உடைய மரம் திடீரென்று ஐயறிவுடைய விலங்காக மாறினாலும், பசுகரணங்களோடு கூடிய உடம்பையுடைய குழந்தை திடீரென்று பதிகரணங்களோடுகூடிய தெய்வக் குழந்தையாக மாறினாலும் அவற்றை வளர்ச்சி என்று கூற முடியாது; மிகப் பெரிய மாற்றம் என்றுதான் கூறவேண்டும். திருவாதவூரர் என்ற பாண்டிய அமைச்சர் அடைந்த திடீர் மாற்றம் இப்பாடலில் (468) பேசப்பெறுகிறது. ஒரே நாளில் சில மணித்துளிகளில் அமைச்சரின் வாழ்க்கை திசைமாறிவிட்டதால், இதனை வளர்ச்சி என்று கூறாமல் முழுமாற்றம் என்று கூறுகிறோம். பெருந்துறைப் பெருமான் நாமங்களைப் பேசுவோர்க்குத் துன்பம் துடைக்கப்படும்; இன்பம் வரும் என்கிறார் அடிகளார். ஆனால், திருப்பெருந்துறையில் குருநாதரைச் சந்திக்கின்றவரையில் இறைவனின் நாமங்களைத் திருவாதவூரர் ஜெபித்துக்கொண்டு இருந்தாரா என்று அறிய வாய்ப்பில்லை. ஆனால் அடிகளாரைப் பொறுத்த வரையில் குருநாதரின் ஒரு விநாடி தரிசனம், துன்பத்தைத் துடைத்து இன்பத்தைத் தந்ததோடு நிற்கவில்லை. அதற்கு மேலும் பல படிகள் சென்று, அவருடைய மேல்வரும் பிறப்புக்களுக்குரிய வித்தை, ஈரமாகவே வைத்து முளைக்காமல் செய்துவிட்டது. இனிமேல் பிறப்பு இல்லாமல் செய்த காரணத்தால் அப்பிறப்பிற்குக் காரணமாகிய இரு வினைகளும் சமமாகி விட்டன. இந்த இருவினையொப்பு நிகழ்ந்த காரணத்தால் திருக்கழுக்குன்றத்தில் குருநாதரையும் அவர் கொண்ட பல்லாயிரக் கணக்கான கோலங்களையும் ஒரே நேரத்தில்