பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஒருங்கே காணும் வாய்ப்பைப் பெற்றதாக அடிகளார் கூறுகிறார். - இறுதியில் உள்ள காட்டினாய்’ என்ற சொல், மிக ஆழமான பொருளை உடையது. கணக்கிலாக் கோலம் ஏதோ அடிகளாருக்காக, அந்த விநாடியில் மேற்கொள்ளப் பெற்ற ஒன்று என்று நினைத்துவிடக் கூடாது. இந்தக் கோலம் எப்பொழுதும் உள்ளதுதான். அதைக் காணும் ஆற்றலோ வாய்ப்போ அடிகளார் உள்ளிட்ட யாருக்கும் இல்லை. ஆனால், அடிகளாருக்கு இக்கோலங்களைக் காட்ட நினைத்தார் குருநாதர். அவரே அருள்கூர்ந்து காட்ட விரும்பியதால்தான் அடிகளார் அதனைக் காண முடிந்தது. இக்கருத்துப் புதியதன்று. அடிகளாருக்கு 300 ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த நாவரசர் பெருமான், காண்பார் யார் கண்ணுதலாய் காட்டாக் காலே என்று பாடியதும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும். தானியங்களில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாதது மான பல சிற்றுயிர்கள் உட்புகுந்து வாழ்கின்றன. ஒவ்வொரு மருந்தில் அந்தந்தத் தானியத்தை நனைப்பதன் மூலம் ஒவ்வொரு குறிப்பிட்ட பூச்சியைத்தான் கொல்ல முடியும். இதற்குப் பதிலாக, அணுக்கதிர்களை ஒரு விநாடி அத்தானியத்தின்மேல் செலுத்தினால் எல்லாக் கிருமிகளும் அழிந்துவிட, தானியம் தூய்மை பெற்று விளங்கும். அதேபோல, உயிர்கள்மாட்டுள்ள ஒவ்வொரு குறையையும் போக்க, தனித்தனியாக ஜபம், தவம் முதலியவற்றைச் செய்து அவற்றைப் போக்கமுடியும். ஆனால், இதற்கு நெடுங்காலம் ஆகும். உயிர்களிடத்து மலிந்துள்ள எல்லாக் குற்றங்களையும் போக்கி, இருவினையொப்பு நிலையைப் பெறப் பல பிறவிகள். எடுக்கவேண்டி நேரிடும்.