பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தெரியாக் காலத்தே) அவ்வுயிரினுள் புகுந்து (உட்புகுந்து அதன் உள்ளத்தில் நிலைபேறாக (உளம் மன்னி) நின்றுவிட்டான். பின்னர் இந்த உயிர் திருவாதவூரர் என்ற கருவினுள் புகுந்தபோது (ஊன் புக்கு அந்தக் கரு இடையே கலைந்து அழிந்துவிடாமல் அதனைத் திருத்திக் கருத் திருத்தி) காத்தான். பின்னர் அந்த உயிரையும், உயிர் புகுந்த உடலையும் அவற்றின் தகுதி பாராமல் கருணையினால் ஆண்டுகொண்டான். தன் திருவடியைத் திருவாதவூரரின் தலையின்மேல் வைத்ததால் அந்த உடலை ஆட்கொண்டான். எல்லையற்ற ஆனந்த சாகரத்தில் அடிகளாருடைய உயிர் அழுந்தி நிற்குமாறு செய்தமையின் உயிரையும் ஆட்கொண்டான். இவ்வாறு கூறுவதால் திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு முன்னரே திருவாதவூரரின் ஆன்மாவில் இறைவன் புகுந்து விட்டான் என்பது தெளிவு. அப்படியானால் திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குத் தேவை என்ன? முன்னரே ஊன் புக்குக் கருணையினால் ஆண்டுகொண்டான் என்றால், திருப்பெருந்துறை நிகழ்ச்சியால்தான் திருவாதவூரர், மணிவாசகராக மாறினார் என்று நாம் கூறுவது எவ்வாறு பொருந்தும்: ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்கும். எல்லா உயிர்களிலும், எவ்வளவு பாவப்பட்ட ஜென்மம் ஆயினும் அந்த ஆன்மாவினுள்ளும், இறைவன் ஒளித்து உறைகின்றான் என்பதை மறுக்கமுடியாது. அப்படி அவன் ஒளித்து உறைந்தாலும், ஒர் உடலில் புகுந்த அந்த உயிர் சஞ்சித, பிராரத்துவ வினைகளுக்குக் கட்டுப்பட்டதாகலின் அதற்குரிய செயல்களை இந்த உடம்புடன் உள்ள உயிர் செய்யும்போது, உள்ளேயுள்ள இறைவன் அதில் தலையிடுவதே இல்லை.