பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 389 புல்லரில் கடைப்பட்ட நாயேனை (478) என்றும், சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை (479) என்றும், அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி.வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு (482) என்றும், 'பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை (483) என்றும் பாடுவதைப் பார்த்தால் அடிகளார் தம் உடம்பைப்பற்றி இங்கே கூறவில்லை; உடம்போடு கலந்த உயிரையே பேசுகிறார் என்பதை நன்கு தெளியலாம். இத்தனை குற்றங்களையும் தம் உயிரோடு இணைத்துப் பாடிவிட்டு, இத்தனை குற்றங்களையும் பொறுத்துக் கொண்டு பிறவியை வேர் அறுத்தவரைத் தில்லையில் கண்டேன் என்று பாடுகிறார் அடிகளார். இத்தோடு அவர் நின்றிருந்தால் தனிப்பட்ட முறையில் சிந்திப்பதற்குத் தேவை எதுவும் இல்லை. பல குற்றங்களுக்கும் இடமாகவுள்ள தம் உயிர், அதன் விளைவாக இந்தப் பிறவியை எடுத்த உயிர், பிறவியைப் போக்கிய குருநாதர் என்று நேரே பொருள் கொண்டுவிடலாம். இந்தப் பொதுத்தன்மைக்கு மாறாக, இன்னும் சொல்லப்போனால், திருவாசகத்தின் மிகப்பெரும் பகுதி யில் காணப்பெறும் போக்கிற்கு மாறாக, ஒரு பாடல் இந்தக் கண்ட பத்தில் தனித்து விளங்குகிறது. அதுவே உருத் தெரியாக் காலத்தே (477) என்று தொடங்கும் பாடலாகும். இதுவரை திருப்பெருந்துறையில் குருநாதர் வடிவுடன் வந்தவர்தாம் திருவடி தீட்சை செய்து, தம்மை ஆட்கொண்டு தம் பிறவியை வேரறுத்தார் என்று பாடிவந்த அடிகளார், இந்த அடிப்படை முழுவதையும் மாற்றி, இப்பாடலைப் பாடுகின்றார். தம்முடைய உயிர் (ஆன்மா) ஒர் உடம்பினுள் புகுவதற்கு முன்னரே சூக்கும வடிவில் இருக்கும்பொழுதே, (உருத்