பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்றும், பேதமிலாப் பெருமையனை (484) என்றும் வருகின்ற பகுதிகளில் யாரைக் கண்டீர்கள் என்ற வினாவிற்கு நேரடியான விடையில்லை. இன்ன செயல்களைச் செய்தவன் என்ற படர்க்கை ஒருமை ஆண்பால் வினைமுற்றாக வருகின்ற சொற்களுக்குத் தில்லைக்கூத்தன் என்று பொருள் சொல்ல வாய்ப்பில்லை. பிறப்பை அறுத்தவர் குருநாதர் என்று வலுவாக நம்பினார் அடிகளார். அப்படி அறுத்தவரை அணி கொள்தில்லை கண்டேன் என்றால், குருநாதரை, குருநாதர் வடிவத்தில், தில்லையில் கண்டார் என்று பொருள் கொள்வதா? இவ்வாறு பொருள் கொள்ள இடமுண்டு. அதில் தவறில்லை என்றாலும், அது மனநிறைவு தருவதாக இல்லை. இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு மறுபடியும் சிந்திக்கத் தொடங்கினால் இந்தப் பதிகத்தில் ஒரு புதுமையைக் காணமுடியும். பிறப்பின் இழிவு, அதனைப் போக்கியவரின் கருணை என்பவை எட்டுப் பாடல்களில் இடம் பெற்றிருக்க, இந்தக் கருத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் ஒரு பாடல் நிற்கிறது. அந்த ஒரு பாடல் பிறப்பின் இழிவு பற்றிக் கூறவில்லை. பிறப்பு என்று சொல்லும்போது இந்தப் பரு உடலை மட்டும் நாம் குறிப்பிடுவதில்லை. பருஉடலோடு இணைந்து கலந்து நிற்கின்ற உயிரையும் சேர்த்துத்தானே கூறுகிறோம்! அப்படியானால், உடம்பெடுத்த உயிர், அதற் குரிய உயர்ந்த தன்மையைப் பெறாமல், இந்த உடலோடு சேர்ந்த காரணத்தால், இழிந்த பல செயல்களுக்கும் உடந்தையாகிவிடுகிறது என்பதுதானே பொருள்? இந்தக் கருத்துத்தானே எட்டுப் பாடல்களில் பேசப்பெறுகிறது? 'இந்திரிய வயமயங்கி (175) என்றும், வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு (47) என்றும், கல்லாத