பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 387 இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு தில்லையில் அருளப்பெற்றதாகிய கோயில் மூத்த திருப்பதிகம், கண்ட பத்து என்ற இரண்டையும் ஒருங்குவைத்து மறுபடியும் படித்துப்பார்த்தால் இரு வேறு கருத்துக்கள் இந்த இரு பதிகங்களிலும் நிமிர்ந்து நிற்பதைக் காணமுடியும். கோயில் மூத்த திருப்பதிகத்தில் அடியார் நடுவுள் இருக்கும் ஒரே யொரு காரியம்தான் வேண்டப்படுகிறது. அந்த வேண்டுதல் வெளிப்படையாகவும், விளக்கமாகவும் பேசப்டெறுகிறது. ஆனால், கண்ட பத்தின் பத்துப் பாடல்களிலும் தில்லை கண்டேனே' என்று பாடியவர், ஒரு பாடலிற்கூட அவன் யார் என்று கூறவில்லை. கண்டேன் என்ற சொல் கண்ணாகிய பொறியால் காணப்பெறும் இயல்புடைய பருப்பொருளையும் நற்பண்புகளைக் கருத்தால் கண்டேன் என்ற நுண்பொருளையும் கூறுகின்ற மரபு பண்டுதொட்டே உண்டு. கண்ட பத்தில் வரும் கண்டேனே என்ற சொல் கட்பொறி மூலம் காண்பதையே குறிக்கின்றது. இதன் எதிராக, அந்தமிலா ஆனந்தம் கண்டேன் (175) என்றும், சிவபதத்தைக் கண்டேன் (477) என்றும், கோதில் அமுது ஆனானை'க் கண்டேன் (47) என்றும், கிளர் ஒளியைக் கண்டேன் (484) என்றும் பாடுவது காணப்பட்ட பொருளுக்குப் பருவடிவு இல்லை என்பதைக் குறிக்கும். ஆனந்தத்தையும், சிவபதத்தையும் கண்டேன் என்று கூறுவது மரபு வழுவாகும். இவைபோகப் பின்வரும் இடங்களில் இணையிலியைக் கண்டேன்' (47) என்றும், பசு பாசம் அறுத்தானைக் கண்டேன்' (478) என்றும், உலகுடைய ஒரு முதலைக் கண்டேன்' (480) என்றும், வித்தகனார் விளையாடல் கண்டேன்' (48) என்றும், ‘என்னை ஆண்டானைக் கண்டேன்' (482) என்றும், வான் கருணை தந்தானை' (483)