பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பிரார்த்தனைப் பத்து பிரார்த்தனைப் பத்து என்ற தலைப்பு, குயில் பத்து, அச்சப் பத்து, ஆசைப் பத்து என்பவைபோல அமைந்துள்ள ஒரு தலைப்பாகும். இத்தலைப்பைக் கொடுத்தவர்கள், கொடுக்கின்ற காலத்தில் இதில் பதினொரு பாடல்கள் உள்ளன என்பதை அறிந்திருந்தார்களா என்று தெரிய வில்லை. அன்றே பதினொரு பாடல்கள் இருந்திருப்பின் பத்து என்ற பெயரைத் தந்திருக்க நியாயமில்லை. சற்று நின்று நிதானித்தால், தலைப்புத் தந்த காலத்தில் பத்துப் பாடல்களே இத்தொகுப்பில் இருந்திருக்க வேண்டு மென்று நினைக்கவேண்டியுள்ளது. நாளாவட்டத்தில் யாரோ ஒரு நல்லவர் ஒரு பாடலை எழுதி இடையில் செருகியிருக்க வேண்டும். அவ்வாறு செருகியவர் நல்ல புலமையும், அந்தாதி இலக்கணத்தை நன்கு அறிந்த வராகவும் இருத்தல் வேண்டும். அந்த முறையில் அந்தாதித் தொடை மாறாமல் இடையே புகுத்தப்பெற்ற பாடல் எது என்று கண்டுகொள்வது கடினமாயினும், முயன்றால் அதனையும் செய்துவிடலாம் என்றே தோன்றுகிறது. உதாரணமாக ஒவ்வொரு பாடலின் தொடக்கம் முடிவு இரண்டையும் அடியில் தந்துள்ளோம். 1. கலந்து - - அடியேற்கே 2. அடியார் - - அருளாயே 3. அருளார் - - வேண்டுமே 4. வேண்டும் . - மேவுதலே 5. மேவும் - - அறுதலே