பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 395 6. அறவே - - கடலே 7. கடலே - - துணியாயே 8. துணியா - - தாராயே 9. தாரா - Κ- மானே 10. மானோர் . --- கூடுவதே 11. கூடி - - கலந்தே இவற்றை ஒருமுறை கவனமாகச் சிந்தித்தால் எல்லாப் பாடல்களும் ஒரு வரன்முறையில் அமைந்திருத்தலைக் காணலாம். அதாவது, ஒரு பாடலின் நான்காவது அடியின் இறுதிச்சொல் அல்லது இறுதிச்சொல்லில் உள்ள சில அசைகள் அதனை அடுத்துவரும் பாடலின் முதற்சொல் லாக வருதலைக் காணமுடியும். இந்தப் பொதுவிதி எல்லாப் பாடல்களிலும் இடம்பெற்றிருப்பினும் மூன்று (487) ஐந்தாம் (489) பாடல்களில் ஒரு சிறுவேறுபாடு அமைந்துள்ளது. மூன்றாம் பாடல் வேண்டுமே என்று முடிகிறது; ஐந்தாம்பாடல் மேவும் என்று தொடங்குகிறது. இவ்வாறு அமைவது அந்தாதி இலக்கணத்திற்கு உட்பட்டதே ஆகும். ஆனால், இலக்கணப்படி சரியென்று கூறலாமே தவிர, ஏனைய பாடல்கள் அமைந்திருக்கும் முறைபோல, மூன்றாம் பாடலின் இறுதிச்சொல் ஐந்தாம் பாடலின் முதற்சொல்லாக அமையவில்லை. அதற்குப் பதில் 'மே' என்ற நேரசை மட்டும் ஐந்தாம் பாடலின் தொடக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. . இந்தச் சிறுவேறுபாட்டை அறிந்துகொண்ட அந்த நல்லவர் தம்முடைய புதிய படைப்பை வேண்டும் என்று தொடங்கி மேவுதலே' என்று முடித்துள்ளார். பாவம் திருவாசகத்தின் இடையில் தம்முடைய பாடலைச் செருகுகிறோமே என்ற அச்சம் அவர் மனத்தில் தோன்ற வில்லைப்போலும், அன்றியும் பத்து என்ற தலைப்பு மேலே