பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இருக்கின்றதே, தாம் பெற்ற பிள்ளையை இந்தத் தொகுதியில் சேர்த்தால் பத்து, பதினொன்றாகிவிடுமே என்ற ஐயம் அவர் மனத்தில் தோன்றவில்லை. திருவாசகத்தில் இடைச்செருகல் செய்ய நெஞ்சழுத்தம் நிரம்ப வேண்டும். அதுமட்டுமல்ல, திருவாசகத்தின் போக்கையும் அதன் அடிப்படையையும் புரிந்து கொள்ளாதவரே இடைச்செருகல் செய்யத் துணிவர், உதாரணமாக ஒன்றைக் காணலாம். வேண்டும் மெய்யடியார் உள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய்' (488) என்ற தொடர் இந்த 'நல்லவரின் பாடலில் இடம்பெற்றுள்ளது. திருவாசகத்தின் வேறு எந்த இடத்திலும், மெய்யடியார்களுள் தாமும் ஒருவர் என்று அடிகளார் கூறிக்கொண்டதே இல்லை. அப்படிக் கூறுவது அவருடைய பண்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் முற்றிலும் மாறானதாகும். 'நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து நான் நடுவே விடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன். திருவாச:15) என்றும், விச்சுக்கேடு பொய்க்கு ஆகாதென்று இங்கு எனை வைத்தாய்' (திருவாச:85 என்றும், 'யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் (திருவாச.94) என்றும் பாடிய பெருமான், மெய்யடியாருள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய் என்று பாடுவாரா? இவற்றை யெல்லாம் மனத்துட் கொண்டு பார்த்தால், இன்றைய பதிப்புக்களில் காணப்பெறும் நான்காவது பாடல் (488) இடைக்காலத்தில் நல்லார் ஒருவரின் துணிச்சலான இடைச்செருகல் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இப்பத்தின் முதலாவது பாடல் (485) அடிகளார் உள்ளத்தில் தோன்றிய இரண்டு பெரு உணர்ச்சிகளுக்கு வடிவு கொடுக்கின்றது. முதலாவது, அன்று ஒருநாள் திருப்பெருந்துறையில் நின் அடியாரோடு கலந்து மர்ந்திருக்கையில் ஒரு பேச்சும் பேசாமல் வாளா