பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 397 இருந்தேன், ஆனாலும் எல்லையற்ற ஆனந்தம் நிறைந்திருந்தது என்பதாகும். அடுத்தபடியாக, அவ்வாறு அடியார் கூட்டத்தோடு இல்லாத நிலையை இரண்டாம் அடியில் கூறுகிறார் அடிகளார். அடியார்களோடு கூடியிராத நிலையில் அந்த ஆனந்தம் இல்லை. அதுமட்டு மன்று, பல இடர்கள் தம் வாழ்க்கையில் புகுந்துவிட்டன என்கிறார். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், சிறந்த உணவின் பெருமையை, உண்ணும்போது அறிவதைவிட, மற்றொரு நாள் எல்லை மீறிய பசியில் திண்டாடும்போது உணரமுடிகிறது. உண்பது என்பது சில நிமிடங்களில் முடிகின்ற ஒரு செயலாகும். உணவின்றி வருந்தி அலமருதல் பல நாட்களிலாகும். அந்தப் பல நாட்களிலும் இந்த ஒரு நாளில் உண்ட உணவை, மீ ட்டும் மீட்டும் நினைப்பது மனித இயல்பு. இதே அடிப்படையில்தான் அடிகளார் அன்று ஒருநாள் அடியாரோடு கலந்திருந்து ஆனந்தத்தைப் பெற்றதை இப்பொழுது பல நாட்களாக நினைந்து, ஒப்பிட்டு வருந்துகிறார். குருநாதரின் ஆணையால், அடியாரிடையே இவர் புகுந்தார்; கிடைத்தது ஆனந்தம். இப்பொழுது குருநாதர் இல்லாதபோது இடர் இவருள்ளே புகுந்தது. ஒருநாள் பெற்ற அனுபவத்தை உலவா இன்பம் என்று பேசுகிறார். ஆனால், அது இல்லாத காலத்தில் உலர்ந்து போனேன் உடையானே' என்று கதறுகிறார். ஒரே பாடலில் இந்த இரண்டு நிலைகளையும் வைத்துப் பேசி, அந்த உலவா இன்பத்தை மீட்டும் அருளவேண்டும் என்று கேட்பது இப்பத்தின் தலையாய நோக்கமாகும். அடிகளார் காலத்திலேயே உண்மை அடியார்கள் சிலர் இறையருளைப் பெற்றதை அடிகளாரே நேரில் கண்டிருக்கிறார். அப்பொழுது அடிகளார். இதனைப் பெரிதாகப் பாராட்டவில்லைபோலும், இப்பொழுது