பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவை இரண்டும் அதாவது கடல் பொங்குதலும் உள்ளம் உருகுதயும் உடனிகழ்ச்சிச் செயல்கள் போல அமைந்துள்ளன.

உடனிகழ்ச்சிச் செயல்கள் என்று கொண்டால் வெற்றிடையே தொடர்பு இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் போகலாம். தொடர்பு இருத்தலாவது, சுருகா பொங்குவதால் உள்ள உருக்கம் ஏற்படுதலாகும். அன்றேல் உருக்கம் ஏற்படுவதால் அதன் பயனாக கருணைக் கடல் பொங்குவதாகும் ஆழ்ந்து சிந்தித்தால் உடனிகழ்ச்சி செயல்கள் போலத் தோன்றினாலும், இவை உண்மையில் கார காரியச் செயல்களாகவே அமைந்துள்ளன. அவனுடைய சுருனை பொங்குவது காரனம்; அதன் பயனாக உள்ளம் உருபுவது காரியம்,

இதிலும் ஒரு சிக்கல் உள்ளது அவனுடைய கருனை என்றும் பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், எல்லாருடைய உள்ளமும் உருகுவதில்லை உருகுவது உள்ளத்திற்கு இயல்பாயினும் அந்த இயல்பை உள்ளம் எளிதில் நடைமுறைப்படுத்துவது இல்லை

எங்கோ சூரியன் தோன்ற, எங்கோ உள்ள தாமரை மலர்வது போலக் கருணைக் கடல் பொங்க, உள்ளம் உருகியிருக்க வேண்டும், பலகால் முயன்றும் இது நடை பெறாமையால் அந்தக் கருணையுடையவனையே பார்த்து. உள்ளம் உருக அருளாய் என்று கேட்டுக்கொள்கிறார்.

இறைப் பிரேமையில் மூழ்கியிருக்கும் அடியார்கள் செய்யும் செயல்கள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ளப் படாதவைகளாகும். அந்தப் பிரேமையில் மூழ்கியிருக்கும் போது சுற்றியிருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது இவர்களுடைய செவிகளில் புகுவதில்லை அந்தியாலயிலிருந்து இறங்கிவரும் போது கொஞ்சம் கொஞ்சமாக உலகமும் சுற்றுச்சூழ்நிலையும் இப்பெருமக்களின் மேல்மனத்தில் லேசாகப் பதிகின்றன. அந்த நிலையில்தான் சுற்றி