பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 40! மெய்யடியார்கள் சிலரை அடிகளார் கண்டிருக்கிறார். கயிலையில் இருந்து இறங்கிவந்த, பருஉடம்பு இல்லாத அடியார்களைத் திருப்பெருந்துறையில் குருநாதருடன் கண்டுள்ளார். இவ்வுலகிலும்கூட அடியார் சிலர் ஆர்வம் கூர நின் அருள் பெற்றார் (48) என்று பாடுவதால் பருவுடலோடு கூடிய மெய்யடியார்களை இந்த உலகிலும் கண்டுள்ளார் என்று தெரிகிறது. மேலும், சிரிப்பார் களிப்பார்’ (திருவாச:386) என்ற பாடல் மூலம் மெய்யடியார்கள் வாழ்க்கைமுறையை விரிவாகக் கூறியுள்ளதால் இவர்களையும் அடிகளார் நேரே கண்டுள்ளார் என்று தெரிகிறது. இதில் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த மெய்யடியார்களை பித்தர்கள் அல்லது பைத்தியங்கள் என்று யாரும் கூறவில்லை. எனவே, அடிகளார் மனத்தில் பிறந்த ஆராய்ச்சியாகும் இது. சராசரி மனிதர்கள் செய்யாத செயல்களைச் செய்யும் இவர்களைப் பைத்தியம் என்று யாரும் கூறவில்லை. ஆனால், சராசரி மனிதர்கள் செய்யாத செயலைச் செய்யும் தம்மைமட்டும் மால் இவன் என்று சொல்லி, வெருண்டோடக் காரணமென்ன? மெய்யடியார்கள், அடிகளார் என்ற இருவரும் ஒரே செயலைத்தான் செய்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களைப் பித்தர் என்று கூறாத உலகம், இவரைமட்டும் ஏன் அவ்வாறு கூறிற்று? இந்த வினாவிற்குரிய விடை அடிகளாரைப் பொறுத்தமட்டில் கிடைத்துவிட்டது. மெய்யன்புடைய அடியார்கள் செயலை உலகம் ஏற்றுக் கொண்டது; அவர்களைப் பித்தர் என்று சொல்லவில்லை. ஆனால், மெய்யன்பு இல்லாமல் அதே செயல்களைச் செய்கின்றவர்களைப் பித்தர் என்று ஏசிற்று. எனவே, தமக்கு மெய்யன்பை அருளவேண்டும் என்று அடிகளார் வேண்டிக்கொள்கிறார்.