பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 குருநாதரின் திருவடிகளில் இணையவேண்டும், அடியார் கூட்டத்தின் இடையே இருக்கவேண்டும், உருகும் உள்ளத்தைப் பெறவேண்டும் என்றெல்லாம் இதுவரை பாடிவந்த அடிகளார், முற்றிலும் வேறுபட்ட ஒன்றை 189 ஆம் பாடலில் வேண்டுகிறார். மேவும் உந்தன் அடியார் என்ற தொடர் முக்காலத் திலும் அவன் திருவடிகளில் இணைகின்ற அடியாரைப் பொதுவாகவும், திருப்பெருந்துறையில் கண்ட அடியார் களைச் சிறப்பாகவும் குறிக்கும் தொடராகும். இவர்களை இங்கு குறிப்பிடவேண்டிய காரணமென்ன? இவர்கள் அனைவருக்கும் பொதுவான சில செய்திகள் உண்டு. இவர்கள் அனைவரும் பரமானந்தப் பழங்கடல் சேர்ந்து ஒரே நேரத்தில் நினைத்தற்கரிய மாபெரும் நிலையை எய்தினார்கள். அது என்ன? ஆவி, யாக்கை, யான், எனது என்ற நான்கையும் ஒரே நேரத்தில் இழந்துவிட்டார்கள். இழத்தல் ஆகிய எதிர்மறைச் செயல்தான் நடைபெற்றதா என்றால், இல்லை. இவற்றை இழந்த உடனே பரமானந்தப் பழங்கடல் சேர்ந்தார்கள். அதாவது இந்தப் பரமானந்தப் பழங்கடலில் சேரவேண்டுமேயானால், ஆவி, யாக்கை, யான், எனது என்ற நான்கும் ஒழியவேண்டும். இப்படி இவற்றை ஒழித்து ஆனந்தப் பழங்கடலில் சேர்ந்தவர்களைப் பார்த்த பிறகு தம் தலைவனிடம் ஒரு விண்ணப்பம் செய்கிறார். 'கயற்கண்ணாள் பங்கா யானும் விரும்பி உன்னை மேவும் அடியாருள் கலந்து, ஆவி, யாக்கை, யான், எனது என்பவற்றை இழந்து, பரமானந்தப் பழங்கடல் சேர விரும்புகிறேன். அதற்கு அருள் செய்வாயாக’ என்று. வேண்டுகிறார். மகிழ்ச்சி இன்பம் முதலியவற்றை அனுபவிப்பதற்கும் இறையனுபவத்தை அனுபவிப்பதற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. முதலில் கூறியவற்றிற்கு நான் மிகவும்: தேவை. எவ்வளவு அதிகமாக மகிழ்ச்சி, இன்பம் இருப்பினும்