பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 403 'நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நான் முற்றிலுமாக அழிந்த நிலையில் இறையனுபவ ஆனந்தம் ஏற்படுகிறது. இதில் அனுபவிக்கின்ற நான், பெறுகின்ற அனுபவம், அனுபவத்தைத் தருபவன் என்ற மூன்றாகத் தொடங்கி, வளர்ந்து, இறுதிக் கட்டத்தில் நானும், தருபவனும் ஒன்றாக இணைந்து அனுபவத்துள் மூழ்கிவிடுகின்றனர். இந்த இறையனுபவ நிலைகூடத் தோன்றி, வளர்ந்து, மறையும் கடல் அலை போன்றது என்று முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். இந்த நிலையும் மாறி ஆவி, யாக்கை, யான், எனது என்ற நான்கும் ஒருசேர அழிய, பரமானந்தப் பழங்கடலில் புகுந்துவிட்டால் அலைபோல் ஏறி இறங்கும் தன்மையோ அனுபவம் வடிந்து வெளிவரும் தன்மையோ இரா. இதனையே அடிகளார் ஆவி, யாக்கை யான், எனது என்று யாதுமின்றிப் பரமானந்தப் பழங்கடல் புகவேண்டும் என்கிறார். - கடல்போன்ற ஆனந்தத்தைக் கவர்ந்து உண்ணுகின்றனர் மெய்யடியார்கள். ஆனால், தாம் இடரே பெருக்கி இவ்வுலகிடை வாழ்வதாக நொந்துகொள்ளும் அடிகளார், அந்த நோவை வெளிப்படுத்துவதோடு நின்றுவிடவில்லை. முன்னர்ப் பல பாடல்களிலும் இதே முறையில்தான் பேசியுள்ளார். திடீரென்று உடையவனுக்கு விண்ணப்பம் செய்வதை விட்டுவிட்டு, ஒரு சிறிய எச்சரிக்கை விடும் நிலையை 49 ஆம் பாடலில் அருளிச் செய்கின்றார். 'ஐயா கடல்போன்ற ஆனந்தத்தைப் பெருக்கெடுத்து, ஓடவிட்டவனுக் நிதான். இதனைக் கண்டவர்கள் அனைவரும் வாரிவாரி விழுங்குகின்றனர். அதையும் நீ பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றாய். அடிநாயேன் ஆகிய நான் போக்கிடமின்றிச் செய்வதறியாது. இங்கிருத்தலையும் நீ