பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 405 மனித மனத்தின் கூறுபாடுகளை நன்கு அறிந்தவர் அடிகளார். எவ்வளவு விரும்பி வேண்டிய ஒரு பொருளைப் பெற்றாலும், அதனைப் போற்றி வைத்துக்கொள்ளும் பழக்கம் நாட்கள் கழியக் கழியக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். அதனால் அன்பை அவனிடம் வேண்டிப் பெற்றாலும், தளராது நின்று அதைப் பேரன்பாக மாற்றி அவனை அடையும் வழியில் இந்த மனம் கொண்டு செல்லும் என்று சொல்லமுடியாது. மனத்தின் இயல்பு அது. அடிகளார் அதனை நன்கு அறிந்தவர் ஆதலால், 'அன்பும் தாராய்' என்று கேட்டவர், அடுத்த விநாடியே உன் திருவடிகளைத் தாராய் என்றும் வேண்டுகிறார். தாராயே’ என்பதோடு 'ஒல்லை வந்தருளி என்ற தொடரை முன்னே வைப்பதால் ஒரு கருத்தைப் பெறவைக்கிறார். 'உடையவனே நீ கருணை கொண்டு அன்பைத் தந்தாலும் அதனை வைத்து வளர்க்கும் திண்மை என்பாலில்லை. அந்த அன்பை வளர்த்துப் பேரன்பாக மாற்றினால் கிடைக்கப்போவது என்ன? கிடைக்கப்போவது உன் திருவடிதான். இந்த மனம், மாறுவதற்குள் உடனே வந்து உன் திருவடிகளைத் தருவாயாக’ என்று வேண்டிக்கொள்வதால் மனித மனத்தின் இயல்பை அடிகளார். நன்கு அறிந்துள்ளார் என்று தெரிகிறது. 493ஆம் பாடலின் கடைசி அடியில் பேரானந்தம் பேராமை வைக்கவேண்டும் பெருமானே’ என்று கூறியது ஏன்? பேரானந்தம் என்று சொல்லிவிட்டாலே அது அழிவில்லாதது நிலைபேறுடையது என்பது பெறப்படு மன்றோ! இதனை அறியாதவரா அடிகளார்? அப்படியிருந்தும் அந்தப் பேரானந்தம் என்னைவிட்டு நீங்காதிருக்க நீ அருளவேண்டும் என்று கூறுவது ஏன்? அடிகளாருக்கு இது திருப்பெருந்துறையில் கிடைத்த பாடமாகும். அங்குக் குருநாதர் தரிசனம் கிடைத்தவுடன் பேரானந்தப் பெருங்கடலில் மூழ்கினார். ஆவி, யாக்கை,