பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 407 நான்முகன், நாரணன் அடிமுடி தேடிய கதை, பலப் பல பதிகங்களில் பலப் பல பாடல்களில் காணப்பெறுகிறது. என்ன காரணத்தாலோ பிரார்த்தனைப் பத்தில், இடைச் செருகல் பாடல் உட்பட, ஒரு பாடலிலும் அக்குறிப்புக் காணப்பெறவில்லை. குழைத்த பத்து இப்பதிகத்தின் முதற் பாடலில் (490 வரும் குழைத்தால்' என்ற சொல்லுக்கும், இறுதிப்பாடலின் இறுதியடியில் வரும் 'குழைத்தாயே என்ற சொல்லுக்குமிடையே பொருள் வேறுபாடு நிரம்ப உண்டு முதலில் வரும் குழைத்தால் என்ற தொழிலுக்குக் கர்த்தா, நான் என்பதாகும். நான் என் கடினமான உள்ளத்தை குழைத்துவிட்டேன் இதனை அடுத்து நீ செய்யவேண்டிய காரியம் பண்டைக் கொடுவினை யிலிருந்து என்னைக் காக்க வேண்டியதாகும். இதனை நீயே செய்திருத்தல் வேண்டும். மனம் குழைந்தவுடன் அதன் பயனாக என் பழைய வினையை நீ போக்கியிருக்க வேண்டும். அதனை நீ செய்யாமையால் இப்பொழுது மறுபடியும், “காவாய்” என்று உன்னை அழைத்து வேண்டுகிறேன்' என்கிறார் அடிகளார். 'உழைத்தால் உறுதி உண்டு’ என்பதும் முதலடியில் கூறப்பெற்றதற்கு விளக்கவுரையாக அமைந்துள்ளது. இங்கு உழைத்தல் என்பது, உள்ளத்தைக் குழைத்தலாகிய செயலைக் குறிப்பதாகும். எத்தகைய உழைப்பும் வீண்போவதில்லை. அந்த உழைப்பிற்கேற்ற பயனைத் தந்தே தீரும். "உழப்பின் வாரா உறுதிகள் உளவோ என்று பட்டினத்தடிகள் கூறியுள்ளார். (திருவிடைமருதூர் மும்மமணிக் 10) குழைத்தலாகிய செயலை அரும்பாடுபட்டு உழைத்துச் செய்துவிட்ட பிறகு அதனுடைய பயனை எதிர்பார்ப்பதில் தவறென்ன இருக்கிறது? அதனையே உழைத்தால் உறுதி உண்டோதான் என்கிறார்.