பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஒவ்வொரு உழைப்பிற்கும் ஒவ்வொரு வகைப் பயன் இருப்பதுபோல, குழைத்தலாகிய உழைப்பின் பயனாகப் பண்டைக் கொடுவினை நோய் தானே அழிந்திருக்க வேண்டும். அது நடைபெறாதபோது உதவி செய்யக் கூடியவனைக் காவாய்' என்று அழைக்கின்றார். இவ்வளவு விரிவாகக் கூறிய பிறகு 'பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ என்று கூறுவதன் நோக்கம் என்ன? அடிகளாரின் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் ஐயத்தைத் தரும் ஒரு விடயம் தட்டுப்படலாயிற்று. உள்ளத்தைக் குழைத்தால் பண்டைக் கொடுவினை நோய் நீங்க வேண்டும். ஆனால், அது நீங்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்ல முடியும். ஒன்று கொடுவினையைப் போக்கும் ஆற்றலுடைய தலைவன் கண்டுகொள்ளாது இருந்திருக்க வேண்டும். எனவே, தம்முடைய இக்கட்டான நிலைக்கு அவன் கவனத்தை ஈர்க்க வேண்டிப் பெரும் குரலெடுத்து வந்து) 'காவாய்' என அழைத்தார். இதனை அடுத்து, உழைத்தால் உறுதி உண்டு என்ற நம்பிக்கை மனத்திடையே தோன்றிற்று. மனத்திடை உறுதி பிறந்ததே தவிர, வினைக்கழிவு என்ற பயன் இன்னும் கிட்டியபாடில்லை; காவாய் என்று அழைத்துப் பார்த்தும் பயனில்லை. அப்படியானால் எங்குப் பிழை நிகழ்ந்தது என்ற வினா அடிகளார் உள்ளத்தில் தோன்றலாயிற்று. தருக்க ரீதியாகப் பார்த்தால் குழைத்தல் என்ற செயலில் நன்கு உழைத்துவிட்டால் கொடுவினை போதலென்ற உறுதி கிட்டியிருக்க வேண்டும். இதுவுமல்லாமல் வந்து காவாய்' என்றும் அழைத்தாயிற்று. காக்க அவனும் வரவில்லை; கொடுவினையும் போகவில்லை. இது ஏன் என்று நினைத்த அடிகளாருக்கு, எங்கோ பிழைநேர்ந்து விட்டது என்ற எண்ணம் தோன்றலாயிற்று.