பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 409 தம்முடைய உழைப்பிலோ அல்லது குழைப்பிலோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். இதுவே இரண்டாவது காரணமாகும். அதனால்தான் வினையும் போகவில்லை; போக்குபவனும் வரவில்லை. பிழை எங்கோ நேர்ந்து விட்டது என்ற தெளிவு மனத்திடை வந்தவுடன் பெருங் குரலெடுத்துப் 'பிறைசேர் சடையாய் என்று அவனை அழைத்து, 'பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ என்று அவனை வேண்டுகிறார். முயற்சி பயன் அளிக்காதபோது முயற்சியில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று நினைப்பதில் தவறில்லை. கோளாறு எங்கே என்று தெரிந்தால் அதைத் திருத்திக்கொண்டு புது முயற்சியில் இறங்கலாம். ஆனால், எங்கே பிழை நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆதலால், 'பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ என்று பொதுவாக வேண்டிக்கொள்கிறார். 497ஆம் பாடலின் போக்கை வாலாயமாகப் பொருள்கொள்ளும் முறையில் கொள்ளாமல், சிந்திக்கத் தொடங்கினால் சில புதுமைகள் இதனுள் புதைந்து கிடப்பதைக் காணமுடியும். பாடலின் மூன்றாவது அடியில் குற்றம் நிறைந்த இந்த உடலைச் சிதையாமல் ஏன் வைத்திருக்கிறாய் என்று கேட்கிறார். இவ்வாறு கேட்கக் காரணம் என்ன? உடலை நீக்கி விரைவில் வீடுபேறு அடையவேண்டும் என்ற கருத்தில் இவ்வாறு பாடியுள்ளார் என்று கூறிச்செல்வது சரியாகப் படவில்லை. எனவே, மூன்றாம் அடியில் சிதை யாதது எத்துக்கு என்று அடிகளார் வினவுவதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று சிந்தித்தால் அந்தக் காரணம் முதலடியில் பேசப்பெற்றிருப்பதைக் காணலாம். இப்பொழுது முதலடியை மறுபடியும் பார்க்கலாம். அவ்வடி அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன்' என்பதாகும். இதன்படி பார்த்தால், திருப்பெருந்துறையில் குருநாதர் ஆண்டவுடன் தி.சி.சி.Iv27