பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலப் பத்து 33 நம்முடைய உள்ளம் இந்த ஆசைகள் மூன்றினிடையே சுற்றிவந்து, வினையை நெய்வதைத் தடுக்க, நமக்கு ஆற்றல் இல்லை. இந்த மூவாசைகளும் அறவேண்டும் என்று வாய் கிழியக் கத்தினாலும் எவ்விதப் பயனும் விளையப்போவதில்லை. - இந்தச் சிக்கலை உணர்ந்த அடிகளார், 'மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கனே! நின் மலர் அடிக்கே என்னைக் கூப்பிட்டுக்கொண்டாலும் சரி; நரகத்தில் (கும்பிக்கே) தள்ளினாலும் of, உன்னுடைய திருவருட்குறிப்பு எதுவென்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் சொல்கிறேன். நீ இப்படியே விட்டுவிட்டால், உன்னிடம் அடைக்கலம் புகுந்தும் அப்பயனை அனுபவியாமல் கெட்டுவிடுவேன்’ என்கிறார். 416. பிறிவு அறியா அன்பர் நின் அருள் பெய் கழல் தாள் இணைக் கீழ் மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார் உன்னை - வந்திப்பது ஒர் நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் அறிவு அறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே - 9 மனித மனத்தின் வினோதமான ஓர் இயல்பை இங்கு நினைவுகூர்வது நலம். பல நாள் விரும்பி, காத்திருந்து அரிதாக ஒரு பொருளைப் பெற்றாலும், சில நாட்களில் அதன்பால் உள்ள பற்றுத் தளர்ந்துவிட, அப்பொருளை நழுவ விட்டுவிடுவது மனித மனத்தின் இயல்பு. - இதன் எதிராகத் திருவடிச் செல்வத்தைப் பெற்றவர்கள் எக்காலத்திலும் எந்த நிலையிலும் அதனை விட்டுநீங்கிப் பிறிதொன்றை அடைய விரும்பியதும் இல்லை; முயன்றதும் இல்லை. இவர்களையே தாள்