பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இணை பிறிவு அறியா அன்பர் என்கிறார் அடிகளார். பிறிவு-பிரிவு) இத்தகைய அடியார்கள் பெற்ற செல்வம் மறிவு அறியாச் மீளுதல் இல்லாத செல்வம் என்று பேசுகிறார். திருவடி இணையைப் பிரிவு அறியாத அன்பர்கள் ஆதலால் அவர்கள் பெற்ற பயனும் மறிவு அறியாச் செல்வம் ஆயிற்று. செல்வம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் அது வந்துவந்து போகும். தன்மையது என்று சொல்பவர்போல, மறிவு அறியா (மீளுதல் இல்லாத) என்ற அடைமொழியைப் பயன்படுத்துகிறார். பெற்றார் என்று சொல்லாமல் வந்து பெற்றார்’ என்று கூறுவதன் நோக்கம் என்ன? வந்து என்ற வினையெச்சம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் புடை பெயர்தலைக் குறிக்கும். அப்படியானால் பிரிவு அறியா அன்பர் எங்கிருந்து வந்து இந்த மறிவு அறியாச் செல்வத்தைப் பெற்றார்கள்? உண்மையைக் கூற வேண்டுமானால் வந்து என்ற சொல் ஒர் உடம்பு புடைபெயர்தலைக் குறிப்பதன்று. உலகிடை பூத உடம்போடு வாழும் மனிதர்களுள் சிலர் இந்த உடம்போடு வாழும்பொழுதேகூடப் பொறிப் புலன்கள், அந்தக்கரணம் ஆகியவற்றை விட்டுவிட்டு, திருவடி இருக்கும் இடத்தை நாடி வருகின்றனர். உடம்பு புடைபெயர்ச்சி இல்லாமல் ஆன்மப் புடைபெயர்ச்சி நடைபெறுகிறது. அதனாலேயே அவர்கள் பிறிவு அறியா அன்பர்கள்' என்ற முத்திரை குத்தப்பெற்று மறிவு அறியாச் செல்வத்தைப் பெற்றார்கள். இவ்வுலகில் இருந்தபடியே திருவடியை ஓயாமல் சிந்தித்து அதனிடம் செல்ல விரும்புவதையே வந்து' என்ற சொல்லால் குறித்தார். தனு, கரண, புவன போகங்களோடு கூடிய இந்த உலகில், இவற்றை அனுபவிக்கக்கூடிய பொறிபுலன்களோடு