பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலப் பத்து 35 கூடிய உடம்பைப் பெற்றவர்களில் சிலர் என்ன செய்தார்கள்? முதலில் ஒர் அறிவைப் பெற்றார்கள். அது என்ன அறிவு? எவ்வளவு சுகபோகங்களோடு கூடினாலும் உடம்பும் உலகும் அதனை அனுபவிக்கும் தம் வாழ்வும் நிலையில்லாதவை என்பதை அறிந்தார்கள். அடுத்து, அவருடைய அறிவு, நிலையாமை உடையவற்றை நீக்கிவிட்டு, நிலையான பொருள் எது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அந்த ஆராய்ச்சியின் பயனாக, இறைவனே நிலையானவன் என்ற முடிவுக்கு வந்தது. அதனை அடுத்து அந்த நிலையானவன் எத்தகையவன் என்ற ஆராய்ச்சியில் புகுந்தது. ஒரளவு அவனைப்பற்றி அறிந்தவுடன் நிலைபேறுடைய அவன் திருவடிகளை அடைவதற்கு வழி என்ன என்ற ஆராய்ச்சியில் புகுந்தது. நிறைவாக அவன் திருவடிகளில் சரணம் அடைந்தது. மூன்று நிலைகள் முதலில் பேசப்பெற்றன. நிலைமையை உணர்தல், நிலைபேற்றை அறிதல், நிலைபேற்றைத் தருபவனை ஒரளவு அறிந்துகொள்ளுதல் என்ற மூன்றும் போக, நான்காவதும் ஒன்று உண்டு, அதுவே அந்த நிலைபேறுடைய பொருளை அடைய, வந்தனை புரிவது ஒன்றே வழி என்று அறிதல், இவ்விரிவான கருத்தைத்தான் கவிதை ஆதலின் அடிகளார் முன்பின்னாக மாற்றிச் சொல்லியுள்ளார். பாடலைப் பின்வருமாறு கொண்டுகூட்டிச் செய்தல் நலம். “நின்னையே அறியேன்; உன்னை வந்திப்பது ஒர் நெறி அறியேன்; நின்னையே அறியும் அறிவு அறியேன். பெரும் பதவி வகித்து, பெருஞ்செல்வத்துடன் வாழ்ந்தவர் திருவாதவூரர். அந்த நிலையில் இவை நிலையில்லாதவை, இவற்றைவிட்டு நிலையான பொருள் எது என்று ஆராயும் அறிவையோ ஆற்றலையோ அவர்