பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பெற்றிருக்கவில்லை. இதனை “நின்னையே அறியும் அறிவு அறியேன்” என்கிறார். இத்தொடரில் நின்னை அறியும் அறிவு' என்று கூறப்பெற்றதால் அத்தொடர் பரஞானத்தைக் குறித்து நின்றது. ஒரு பேரரசின் அமைச்சருக்கு அறிவுப் பஞ்சம் இருக்க வாய்ப்பில்லை. பேரறிவு படைத்திருந்தமையால்தான் அவர் அமைச்சராக ஆக்கப்பெற்றார். அந்த அறிவு அபரஞானம் எனப்படும். அந்த அறிவிலிருந்து இறைவனைப்பற்றி அறியும் பரஞானத்தைப் பிரித்துக் காட்டவே நின்னையே அறியும் அறிவு என்றார். நின்னையே’ என்றதில் உள்ள 'ஏ'காரம் ஆழமான பொருளை உடையது. உலகியல் அறிவாகிய அபரஞானம், பல்வேறு வகைகளில் பிரிந்து செல்லக் கூடியது. ஆனால், இறைவனை அறியும் பரஞானம் அவனை அறியும் வழியை அன்றி, வேறு வழியில் நாட்டம் கொள்வதோ செல்வேதா இல்லை. இக்கருத்தை உணர்த்தவே “நின்னையே’ என்று ஏகாரம் தந்து பேசினார். அவனை அன்றி வேறு ஒன்றிலும் நாட்டம் இல்லாமையால் iன்னையே அறிவும் அறிவு (பரஞானம்) என்பால் இல்லை ான்பதைக் குறிக்கவே அறியேன்” என்றார். அவனே தலைவன்; அவனை அடைவது ஒன்றே வழி என்பதை அறியாதபொழுது வந்திப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அவனை அறியும் அறிவு பெற்றிருந்தால் அவனை அடைய முயல்வார்கள். அந்த முயற்சி என்ன? அவனை வந்திப்பதாகிய ஒரே வழிதான். இவை இரண்டும் இல்லாதபொழுது அவனை அறிய முடியாது என்பதைக் கூறவே நின்னையே அறியேன்” எனறாா. 417. வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாளிக் 曼 கொண்டு ۳۹ سی سیستگس ۹- سیاه ده : விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்