பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 குறிக்கும் பொதுச்சொல் ஆதலின், ஏழைபங்கா!' என்ற விளி, உமையொருபங்கனே என்ற பொருளைத் தருகின்றது. இவ்வாறின்றி அருட்செல்வம், பொருட்செல்வம், வாய்ப்பு வசதி என்ற ஏதுமில்லாத ஒருவனை 'ஏழை என்ற சொல் குறிக்குமல்லவா? எவ்விதத் துணையுமில்லாத ஏழைகட்கு உதவும் பங்காளியாக உள்ளான் என்பது மற்றொரு பொருளாகும். 500ஆம் பாடல் முரண்பாட்டினிடையே (ԱՔ(ԱՔ முதலையே காணும் பழந்தமிழர் மரபிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 502ஆம் பாடல் இன்று பலரும் அறிந்து கூறி மகிழும் ஒப்பற்ற பாடலாகும். முழுச் சரணாகதி என்று வடவர் கறுவதற்கும், மேலை நாட்டார் முழுச் சரணாகதி (absolute surrender) 6Taşpı â.DIGugi (5ub Goug)|List(s) அதிகமில்லை. 'அன்றே என்பது தொடங்கிக் கொண்டிலையோ' என்பதுவரை உள்ள பகுதி முழுச் சரணாகதியின் விளக்கமாகும். இவ்வாறு சரணாகதி அடைந்துவிட்ட பிறகு, தம்மைப் பற்றிய எவ்வித நினைவும் இல்லாமல் இருப்பதுதான் இதன் முழு இலக்கணம். அப்படியிருக்க 'இன்று ஒர் இடையூறு எனக்குண்டோ. நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று அடிகளார் பாடுவது, வேண்டா கூறுதல் ஆகும். வேறு யாரேனும் இவ்வாறு பாடியிருப்பின் இதனை வேண்டா கூறினார் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், இதனைக் கூறியவர் கல்வி, கேள்வி, அறிவு, ஆராய்ச்சி என்பவை முழுதும் நிரம்பிய திருவாதவூரர் மட்டுமல்ல, இதன்மேல் குருநாதரின் திருவடிதீட்சை பெற்று, அமுதி தாரைகள் எற்புத்துளைதொறும் ஏற்றப்பெற்றவர் அல்லவா? திருவருளை முழுவதுமாகப் பெற்ற ஒருவர் இவ்வாறு கூறினார் என்றால், அது, நின்று நிதானிக்க வேண்டிய