பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 413 இடமாகும். ஏன் இவ்வாறு கூறினார் என்று சிந்திக்கத் தொடங்கினால் சில அடிப்படை உண்மைகள் தெற்றென விளங்கும். முன்னர் நாம் பல முறை கூறியுள்ளபடி மனித மனம் விந்தையானது, ஒரு குழந்தையைத் தத்துக் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தையின் கோத்திரத்தையே மாற்றிவிட்டுப் புதிய பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுகின்றோம். ஆனால், இவ்வாறு கொடுத்த பிறகும் அந்தக் குழந்தையையே ஒயாது நினைத்துக்கொண்டு அது இப்பொழுது என்ன செய்கிறது? என்று சிந்திப்போர் பலராவர். குழந்தையை எடுத்துக் கொள்ளும் புதிய பெற்றோர், இனிக் குழந்தையை வந்து பார்த்து அனைவருக்கும் சங்கடத்தை உண்டாக்க வேண்டா' என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டதற்குப் பிறகுகூட, எங்கோ ஒரிடத்தில் ஒளிந்துநின்று குழந்தையைப் பார்க்க முயலும் பழைய பெற்றோரை இன்றும் காண்கிறோம். ஆவி, உடல், உடைமையெல்லாம் சரணாகதியாகக் கொடுத்துவிட்ட பிறகும் அடிகளார் மனத்தில் தோன்றுகின்ற நினைவுகள் இதே போன்றவைதான். 'இன்று ஒர் இடையூறு எனக்குண்டோ? என்பது விநோதமான வினாவாகும். மூன்றையும் கொடுத்துவிட்ட பிறகு எஞ்சியிருட்து எது? உடலும் ஆவியும், ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் பொழுதுதானே 'நானும் எனதும்’ தோன்றுகின்றன. இப்பொழுது இவை இரண்டும் ஒடுக்கப் பட்டு விட்டமையின் நானும் இல்லை; எனதும் இல்லை. இது தெரியாதா அடிகளாருக்கு? பின்னர் எந்த அடிப்படையில் 'எனக்கு உண்டோ என்று பாடினார்? இந்தச் சிக்கலை உண்டாக்கிய குருநாதர் ஆட்கொண்ட போதே உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டார், அவர் மறையும்பொழுது அடிகளாரின் இம்மூன்றையும் தம்முடன் எடுத்துச் சென்றிருந்தால் பிரச்சினை தோன்றப் போவதில்லை. ஆனால், பொல்லாத