பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 குருநாதர் திருவருளை முழுவதுமாக நல்கிவிட்டு, போகிறபோக்கில் (மறையும் போது) இம்மூன்றையும் அடிகளாரிடமே ஒப்படைத்து விட்டல்லவா மறைந்தார். அடிகளாரிடமிருந்து புறப்பட்டு. குருநாதரின் திருவடி களில் ஐக்கியமான இந்த மூன்றும் மீண்டும் அடிகளாரி டமே வந்துவிட்டன. அப்படி வந்து புகுந்தவுடன், நானும், எனதும் கூடவே வந்துவிட்டன. ஆனால், இந்த நானும், எனதும் பழைய நானும் எனதுமல்ல. குருநாதர் திருவடியைச் சென்று மீண்ட காரணத்தால் இந்த நானும் எனதும் து.ாய்மை பெற்றுச் சொல்லளவில் நின்றுவிட்டன. அதனால்தான் இன்று ஓர் இடையூறு எனக்குண்டோ என்று பாடமுடிந்தது. பழைய திருவாதவூரராக இருந்திருப்பின், இடையூறு எனக்குண்டோ என்று கூறினாலும் இடையூறு உண்மை யாகவே அவருக்குத்தான் என்பது விளங்கியிருக்கும். காரணம், திருவாதவூரரென்ற மனிதரிடமிருந்து நானையும் எனதையும் பிரிக்கமுடியாது. அருள்பெற்ற அடிகளாரிடம் நானும் எனதும்' நின்றாலும் அவை செயலற்று, செருக்கிழந்த சொல்லளவாய், சுட்டுமாத்திரையாய் நின்றுவிட்டன. ‘நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே என்பது இறுதித் தொடராகும். பழைய நானாக இருந்திருப்பின் 'நானோ' என்பதிலுள்ள ஒகாரம், வினாப்பொருளைத் தராமல், உறுதியைத் தெரிவிக்கும் ஒகாரமாக இருந்திருக்கும். நானேயோ தவம் செய்தேன்’ (55) என்பதிலுள்ள ஒகாரம் உறுதிப்பொருளைத் தருவதாயும் காணலாம். இப்பொழுது அடிகளாரிடம் உள்ள நான் சுட்டு மாத்திரையாய் நின்ற நான் ஆதலின், குருநாதர் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் நான் தலைவனல்லன்; எனக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்ற