பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 415 பொருளைத் தந்துநிற்கிறது. ஒரு சில பெருமக்கள் நன்றே செய்வாய் பிழைசெய்வாய்' என்பதில் நன்றே செய்வாய்' என்பதை உடன்பாட்டுத் தொடராகவும், 'பிழைசெய்வாய்' என்பதை வினாத் தொடராகவும் கொண்டு, நீ நல்லதுதான் செய்வாய்; பிழையா செய்யப்போகிறாய்' என்று பொருள் கூறுகின்றனர். இவ்வாறு பொருள் கூறினால் நானோ இதற்கு நாயகம் என்ற தொடர் நின்றுவற்றும் தொடராக மாறிவிடும். பாடுபவர் மணிவாசகர் ஆதலின் நின்றுவற்றும் தொடரை அவர் பயன்படுத்தமாட்டார் என்பதை மனத்தில் கொள்வது நலம. அடுத்து, 503ஆம் பாடலை நோக்குவோம், இதற்கு முந்தைய பாடலில் எனக்கு என்பதற்கும், நான் என்பதற்கும் சுட்டளவில் நின்ற சொற்கள் என்று பொருள் கூறியது எவ்வாறு பொருந்தும் என்ற வினாத் தோன்று மேயானால் அதற்குரிய விடை இப்பாடலில் உள்ளது. நயந்து நீயே ஆட்கொண்டாய் அதனால் மாயப் பிறவி உன்வசமாக ஆகிவிட்டது. அந்தப் பிறவியை அதாவது உடம்பை, அதனோடு சேர்ந்தவற்றை நீ எடுத்துக் கொள்ளுகின்றவரையில் வைத்துக்கொண்டிருப்பதுதான் என்னுடைய கடமை. இன்னது செய்யவேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம் எனக்கேது? நீ வேண்டுமான காலம் இந்த உடம்பையும் அதனோடு சேர்ந்த மற்றவற்றையும் இந்த உலகில் விட்டுவைத்தாலும் சரி, உன் திருவடிகளில் சேர்த்துக்கொண்டாலும் சரி, இன்னது செய்க என்று கட்டளையிடும் அதிகாரம் எனக்கில்லை. இப்பாடலைக் கூர்ந்து பார்த்தால், இதில் இரண்டு 'நான்கள் இருப்பதை அறியமுடியும். நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்' என்பதிலுள்ள பழைய நான்'. ஆயக் கடவேன் நானோதான்’ என்பதிலுள்ள நான் செயலிழந்து சுட்டுமாத்திரையாய் நிற்கும் புதிய நான் ஆகும்.