பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 உயிருண்ணிப் பத்து இந்தப் பிறப்பிலேயே இறைக் காட்சி பெற்ற அருளாளர்கள் உலக வரலாறு முழுவதிலும் அங்கங்கே காணப்படுகின்றனர். காட்சி பெற்றதன் பயனாகத் தாங்கள் கண்ட காட்சிக்கு ஒரு வடிவு கொடுத்து, அதனை ஒரு புதுச் சமயமாகச் செய்து அதனைப் பரப்பியும் உள்ளனர். இறைக் காட்சி மூலம் தாங்கள் பெற்ற அளவற்ற ஆற்றலைப் பயன்படுத்தி பிற மக்களைத் தம்வழிப்படுத்த முயன்றவர் அருளாளர்களுள் சிலராவர். இவ்வாறு முனையாமல் தாம் பெற்ற அருளனுபவத்தை அனுபவித்து முடித்தபிறகு, காட்சியெல்லாம் மாறிவிட, இப்பிரபஞ்சத்தைப் புதிய கண்ணோட்டத்தில் கண்டு பாடிய அருளாளர்கள் சிலர். இவர்கள் அனைவருக்கும் அப்பாற்பட்டு இந்நாட்டில் தோன்றிய சைவ, வைணவ அருளாளர்கள், பக்தி என்ற ஒர் அடிப்படையை வளர்த்துக்கொண்டால் உலகத் துன்பங்களிலிருந்து விடுபட்டு, இறையடி என்ற வீடுபேற்றை அடையலாம் என்பதைத் தேவாரம், பிரபந்தம் முதலிய அருட்பாடல்களில் விரிவாகக் கூறிப்போயினர். ஆனால், இதுவரை மேலே கூறியுள்ள அருளாளர்கள் தொகுதியில் எந்த ஒருவரும் தாம் பெற்ற அனுபவத்தை, இறைக் காட்சியை இத்தகையது என்று எடுத்துத் தனியே விளக்கிப் பாடியதில்லை. சாதாரண உலகியல் இன்பங்களைக்கூட அற்புதம், ஆச்சரியம் என்று சொல்லிவிட்டுப்போகாமல், அது எத்தகைய அனுபவம் என்று விரித்துக்கூறினால் கேட்பவர் பெரும் பயன் அடைவர். எட்டாம் நூற்றாண்டுவரையில் தோன்றிய அருளாளர்கள் யாரும் இம்முயற்சியில் நுழையாததால் இதற்கென்றே ஒருவரைப் படைக்க எண்ணினான்