பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 417 இறைவன். அப்படிப் படைக்கப்பட்டவரே மணிவாசகப் பெருந்தகை ஆவார். தாம் பெற்ற இறையனுபவத்தை ஒவ்வொரு பதிகத்திலும், பலப் பல பாடல்களில் விரிவாக கூறியுள்ளார் அடிகளார். அந்த இறையனுபவம், உடலை என்ன செய்தது- பொறி புலன்களை என்ன செய்தது- மனத்தை என்ன செய்ததுஉள்ளத்தை என்ன செய்தது- உயிரை என்ன செய்தது என்பதை விரிவாக எடுத்துக் கூறிய பெருமை அடிகளார் ஒருவருக்கே உரியதாகும். காதல் உணர்வு மிக நுண்மையானதுதான். இன்னார்க்கு இன்னவிதமாய் இருந்ததென்று எடுத்து உரைக்கப்படாதது என்றெல்லாம் கூறினாலும்கூட, பழைய சங்க இலக்கியத்தில் எண்பது சதவீதப் பாடல் அகம்பற்றிய பாடல்களே ஆகும். எனவே, சொல்ல முடியாதது என்று எல்லை காட்டப் பெற்ற ஒன்றைக்கூடச் சொல்ல முயன்றனர் தம் முன்னோர். அவர்களுள் ஒரு சிலர், சொல்ல முடியாததும், மிகமிக நுண்மையானதுமாகிய அந்தக் காதல் அனுபவத்தைப் பிறர் உணர்ந்து அனுபவிக்கும்படி மிகமிக விரிவாகப் பாடி யுள்ளனர். காதல் உணர்வை வெற்றிகரமாகப் பாடுவதற்குக் கபிலர் முதலிய ஒருசில புலவர்கள் தோன்றினர் என்பது உண்மை. ஆனால், எத்தனையோ அருளாளர்கள் இருந்தும், இறையனுபவத்தைப் பெற்றிருந்தும் அவர்களுள் மணிவாசகப் பெருந்தகை ஒருவர்மட்டுமே தாம் பெற்ற இறை யனுபவத்தைப் புறத்தே நின்று கண்டு, அந்த அனுபவத்திற்கு வடிவு கொடுத்துள்ளார். . - இறையனுபவத்தைப் பெறுவதே மிகமிக அரிதான காரியம். காதல் அனுபவத்தில் தான் என்ற அகங்காரம் மடிய மடியக் காதல் உணர்வு சிறப்படைவதுபோல,