பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 421 குருநாதர் வடிவிலிருந்த இறைவன், களிப்பையும் இறுமாப்பையும் தருவதற்கு முன்னர் அவை தங்குவதற்கு ஒரு நல்ல இடத்தைத் தயாரித்தான். அடிகளாரின் உள்ளத் தில் பழவினைகள் என்ற குப்பை நிறைந்திருந்தது. அந்தக் குப்பை இருக்குமிடத்தில் களிப்பும், இறுமாப்பும் தங்க முடியாது; ஆகையால், குருநாதர் வடிவிலிருந்த இறைவன் அருட்டார்வையால் அக்குப்பைகளை எரித்துவிட்டான். பிறவிதோறும் தொடர்ந்துவரும் வினையை ஒழித்தவன் ஆதலால், அவனை வினைக்கேடன் என்கிறார் அடிகளார். தருக்க ரீதியாகப் பார்த்தால், இங்கே ஒரு சிக்கல் தோன்றுகிறது. பழவினைக்குக் கேடு சூழ்ந்தான்; அவ்வினை அழிந்தவுடன் களிப்பும், இறுமாப்பும் அங்கே குடியேறின. குடியேறிய அவை இரண்டும், இப்பொழுது வெளியேறி விட்டன. இவை வெளியேறக் காரணமென்ன என்ற ஆராய்ச்சியில் புகுகின்றார் அடிகளார். குருநாதரால் ஒழிக்கப்பட்ட வினை, மறுபடியும் தம்முள் புகுந்துவிட்டதா? இல்லை என்றால், களிப்பும் இறுமாப்பும் ஏன் உள்ளத்தைவிட்டுப் போகவேண்டும்? இதற்கு விடை காணமுடியாத அடிகளார், மறுபடியும் இவை இரண்டும் எப்பொழுது கிடைக்கப்போகிறதோ என்று அங்கலாய்க்கிறார். இப்பத்தின் இரண்டாவதாக அமைந்துள்ள பாடல் (50%) வைப்புமுறையில் இரண்டாவதாக இடம்பெற்றுள தேனும் இப்பத்தின் முதற்பாடலாக வைத்துப் பொருள் கொள்ள வேண்டிய ஒன்றாகும். குருவடிவில் வந்த இறைவன், ஒரு நாய்க்குத் தவிசிட்டதுபோல தமக்கு அருள்செய்தான் என்பதைக் கூற வந்த அடிகளார், அருள் செய்தான் என்று பொதுப்படை யாகக் கூறாமல், "ஊனார் உடல் புகுந்தான், உளம் பிரியான், உயிர் கலந்தான்’ என்று இவ்வளவு விரிவாகக் கூறுவது, திருப்பெருந்துறையில் நடந்ததைப் பின்னோக்குப்