பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 427 அதன் தலைவராகவுள்ள மடாதிபதி ஏனைய தொண்டர் களைப் போலச் சாதாரண மனிதர்தான். இவர்களின் தலைவர் என்பதுபோக அவருக்கென்று தனிச்சிறப்பு எதுவுமில்லை. ஆனால், காழிப்பிள்ளையார், நாவரசர் பெருமான் ஆகியோரைப் பின்தொடர்ந்த அடியார்கள், தொண்டர்கள் என்பவர்களின் நிலை வேறு. இந்தப் பெருமக்கள்மாட்டும், இறைவனிடத்தும் அத்தொண்டர்கள் பக்தி கொண்டிருந்தார் கள் என்பது உண்மைதான். ஆனாலும், இப்பெரு மக்களோடு சமத்துவம் கொண்டாடக்கூடிய நிலை யாருக்குமே இல்லையாதலால் இவர்களுக்கும் அடியார் களுக்கும் இடையே உள்ள தரவேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவு வேறுபட்டிருந்தமையின் சமமாக அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு இவர்களிடையே ஏற்பட்டதில்லை. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இருந்த நிலை இதுதான். அடிகளார் காலத்தில் நிலைமை முற்றிலும் வேறாகி விட்டது. மூவர் முதலிகளைத் தமிழர்களும், குறிப்பாகச் சைவர்களும் அடையாளம் கண்டுகொண்டதுபோல அடிகளாரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. கண்டு கொள்ளாதது மட்டுமன்று, அவர் காதில் படும்படியாக, அவரைப் பித்தன் என்று ஏசினர். நரி பரியாகியது; சொக்கன் பிட்டுக்கு மண் சுமந்தது ஆகிய நிகழ்ச்சிகளை மக்கள் ஒரளவு அறிந்திருப்பினும் இவை அனைத்தும் சொக்கன் செய்தது அடிகளார் பொருட்டேயாகும் என்பதை மக்கள் மறந்துவிட்டனர் போலும். - பெரியாழ்வார் காலத்திலிருந்து சைவ வைணவப் போராட்டம் பாண்டி நாட்டில் தலைதூக்கிற்று. சீடர்களோடு கூடிய துறவிகள் ஆங்காங்கே இருப்பினும்