பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 திருநீலநக்கர் தம் வீட்டின் அருகில் ஒரு மடத்தை அமைத்திருந்தார் என்று தெரிகிறது. நாவரசர் பெருமான் திருப்பூந்துருத்தியில் நீண்டநாள் தங்கிய காரணத்தினால் அங்கே ஒரு மடத்தை நிறுவி, அதில் தங்கியிருந்தார் என்று அறிகிறோம். இவைதவிரச் சைவர்களுடைய மடங்கள் என்று சொல்லத்தக்கவை அதிகமில்லை. அன்றியும் துறவுக் கோலம் பூண்டு துறவிகளாக வலம்வந்த சைவ அடியார்கள் அதிகம் காணப்பெறவில்லை ஆதலால், அவர்கள் தங்குவதற்குரிய மடம் அமைக்கும் பிரச்சினையும் அங்குத் தோன்றவில்லை போலும். இவற்றையல்லாமல் மற்றொரு முக்கியமான பிரச் சினையை மனத்தில் கொள்ளவேண்டும். மூவர் முதலிகள் செல்லுமிடமெல்லாம் அவர்கள்மாட்டுப் பேரன்பு கொண்ட தொண்டர்கள் உடன்சென்றார்களே தவிர, தனிப்பட்ட முறையில் கூட்டம்கூட்டமாக அடியார்கள் குழுவாக அமைந்து கூட்டுவழிபாடு செய்ததாகவோ, தலயாத்திரை சென்றதாகவோ நினைப்பதற்கு எவ்விதச் சான்றுமில்லை. நாவரசர் பெருமான் 13 ஆண்டுகள் புகுந்திருந்த சமண சமயத்திலும், அதற்கு எதிரியாக இருந்த பெளத்த சமயத்திலும் துறவிகள் ஒன்றுகூடி ஒவ்வொரு மடத்தில் தங்கியிருந்ததும், அவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ததும் நாவரசர் பெருமான் காலத்தில் அதிகம் காணப் பட்டவையாகும். இதனை நாவரசர் பெருமான் நன்கு அறிந்திருக்கவேண்டும். அப்படியிருந்தும் சமண சமயத்தி லிருந்து சைவத்திற்குத் திரும்பிய பெருமான், கூட்டுப் பிரார்த்தனை முறையை சைவத்திற்குக் கொண்டு வரவில்லை. நன்கு சிந்தித்தால் மடங்களில் நடைபெறும் கூட்டுப்பிரார்த்தனை முறை இப்பெருமக்கள் காலத்தில் சைவசமயத்தில் இடம்பெறாமல் போனது உண்மைதான். மடங்களில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும்பொழுதும்