பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 425 சாணினும் உளன் ஒர்தன்மை அணுவினைச் சத கூறுஇட்ட கோணினும் உளன் மாமேருக் குன்றினும் உளன் இந்நின்ற தூனினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் (கம்பன். இரணியன் வதை 124) என்று விடையிறுக்கின்றான். இதுவரை திருவாசகத்தில் வேறெங்கும் காணப்படாத புதிய சிந்தனை உயிருண்ணிப் பத்தின் ஐந்தாம் பாடலில் (50) வெளியிடப்படுகிறது. இதுவரையுள்ள பாடல்களில் அடியார் கூட்டமென்று அடிகளார் குறிப்பிடும் பகுதிகளைச் சற்று நிதானமாக ஆராய்ந்தால் ஒர் உண்மை நன்கு விளங்கும். எட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பாண்டி நாட்டில் சைவத் துறவிகள் பலர், சீடர்களைச் சேர்த்துக்கொண்டு, தனித் தனியாகவே இயங்கிவந்தனர் என்று நினைப்பதில் தவறில்லை. தனியே மடங்கள் அமைத்து அதில் சைவத் துறவிகள் தங்கியிருக்கும் பழக்கம் நாவரசர் காலத்தில் தோன்றியிருக்க வேண்டும். இதன் எதிராகப் பெளத்தம், சமணம் ஆகிய சமயத்தினர் மடங்கள் அமைத்து வாழும் பழக்கத்தைத் தொன்று தொட்டே கொண்டிருந்தனர். என்றாலும், சைவர்களிடையே அப்பழக்கம் வ்லுப்பெற்றிருக்கவில்ல்ை மாவிரதியர், பாஷாண்ட சைவர், காபாலிகர், போன்ற பல உட்பிரிவுகள் சைவர்களிடையே இருந்தமையின் தோன்றிய ஒன்றிரண்டு மடங்களும் தனித்தே இயங்கலாயின. திருஞானசம்பந்தர் காலத்தில், அவர் செல்லுமிடங்களில் எல்லாம் அவரைப் பின்தொடர்ந்து பல அடியார்கள் சென்றுள்ளார்கள். ஆதலின், அவர்கள் தங்குவதற்கு ஆங்காங்கே பல விடுதிகள் அமைத்தனர். அடியார்கள் தங்குமிடம் ஆதலால் அவற்றை மடங்கள் என்று கூறினர் போலும். தி.சி.சி.IV 28