பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 429 உளம்கலந்து கூடிவாழ முற்படுங்கள் என்ற எச்சரிக்கையை விடுக்கின்றார். தமிழகத்தில் சைவப்பெருமக்கள் பாடல்களில் அதிகம் இடம்பெறாத ஒரு புதிய கருத்தாகும் இது. இன்று நமக்குக் கிடைக்கும் திருவாசகப் பிரதிகளில் இப்பாடல்கள் ஒரே முறையில் தொகுக்கப்பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பினை யார், எப்பொழுது, எந்த அடிப்படையில் செய்தார் என்ற விவரங்கள் எதனையும் நாம் அறிய முடியவில்லை. அதனை அறியமுடியாதபோது ஒவ்வொரு தொகுதியின் பாடல் எண்கள் அடிப்படையில் 100, 50, 20, 10 என்ற இறங்குவரிசையில் தொகுக்கப்பெற்றன என்றே பலரும் கூறிச்சென்றனர். இவ்வாறு பிரிப்பது 'சொக்கனுக்குச் சட்டி அளவு என்ற பழமொழிப்படி வகுக்கப்பெற்றது என்றே தோன்றுகிறது. இது பொருந்து மாறில்லை என்று முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். ஆனாலும், பிடித்த பத்திற்கு முன்னரே உயிருண்ணிப் பத்து பாடப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. அருளாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் உள்ளுணர்வு, திடீர்திடீரென்று சில உண்மைகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்றது. இறையுணர்வின் உந்து சக்தியால் பாடப்பெற்றவை ஆதலின், இவர்களை இப்பாடல்களுக்கு முழுப் பொறுப்பாளியாக ஆக்க முடியாது. சாதாரணப் பாடல்கள் என்றால், பாடியவரே அப்பாடல்களுக்கு முழுப்பொறுப்பாளி ஆவார். இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள் அருளாளர்கள் என்பதை முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம். - - இதுவரை குருநாதர், அவருடன் இருந்த அடியார்கள், குருநாதர் தந்த இறையனுபவம் ஆகியவை தம்மைவிட்டுப் போய்விட்டன என்றும், அது மீட்டும் தமக்குத் தரப்பட