பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பெரும்பதவி வகித்தவரும் ஆகிய ஒருவர். நாம் பொருள் காணும் முறையில் இந்தப் பத்துப் பாடல்களை அவர் பாடியிருப்பார் என்றால், என்னைப் பொறுத்தவரை இல்லை என்ற விடைதான் முன்நிற்கும். அப்படியானால் வேறு யாரேனும் பாடி இதை இடைச்செருகி இருப்பார்களா என்றால், அதுவும் இல்லை என்ற முடிவிற்கு வர பாடல்களின் போக்கு உதவுகிறது. இவற்றையெல்லாம் மனத்துட் கொண்டு மறுமுறை சிந்தித்தால் என்னைப் பொறுத்தவரை ஒருமுடிவுக்குத்தான் வர முடிகிறது. அந்த ஒரு முடிவு இதுவரை இப்பதிகப் பாடல்களுக்குப் பொருள் செய்யும் முறையில் பிழை செய்துவிட்டோம் என்பதுதான். இந்த எண்ண ஓட்டத்துடன் அச்சப் பத்தை மறுபடியும் காண்கிறேன். சைவ சமயிகள் என்று தம்மைச் சொல்லிக்கொண்டு, பூசை முதலிய புற வழிபாட்டில் ஆடம்பரமாகப் பொழுதைக் கழிக்கும் போலிச் சைவர்களைப் பற்றியதே இப்பதிகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. உள்ளத்தில் உருக்கமில்லாமல், அதற்கு மூலமான அன்பில்லாமல் போலியாகப் பூசனை புரிபவர் எக்காலத்திலும் உண்டு. பொறுமைக்கு ஒர் எல்லையாகவும் அமைதிக்கு ஒர் அடித்தளமாகவும் இருந்த நாவரசர் பெருமானே இந்தப் போலிச் சைவர்களைக் கண்டு மனம் நொந்துபோயிருந்தார். ஒரே பாடலில், ஒர் அடியில், உண்மையான பூசை புரிபவர்களை 'நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் (திருமுறை: 5:90-9) என்று பாடிய நாவரசு அடுத்த அடியில் 'பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே என்றல்லவா பாடியுள்ளார்? ஆக, போலியாகப் பூசனை புரிபவர்களைக் கண்டு இறைவன் சிரிக்கின்றான் என்கிறார் அடிகளார். இவர்களைக் கண்டு இறைவன் சிரிக்கலாம். ஆனால், பாண்டி நாட்டின் தலைமை அமைச்சர் சிரிக்கத் தயாராக