பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 435 பகுதிகளைக் காட்டிலும் உள்ளம் உருகுதல், கண்ணிர் சொரிதல் ஆகிய அகப்பகுதிகளை ஏறத்தாழ எல்லாப் பாடல்களிலும் சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதேயாம். அடிகளார் காலத்தில் வைணவம் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது என்று முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளோம். சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரட்டி மலைந்தனர் (திருவாச. 4:52,53) என்றும் 'ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர் (திருவாச. 4: 44) உலகாயதம் எனும் ஒண்திறல் பாம்பின் கலா பேதத்த கடுவிடமெய்தி' (திருவாச. 4:56,57) என்றும் அடிகளாரே பாடியுள்ளார் என்பதை நினைக்கும்போது இதில் அச்சப் பத்து எவ்வாறு பொருந்திற்று என்பது சிந்தித்தற்குரியது. இத்தனை சமய வேறுபாடுகளும் அடிகளார் காலத்தே நிலவியிருந்தன என்பது அவர் பாடல்கள்மூலமே அறிய முடிகிறது. இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்த அடிகளார் வெண்ணிறு அணியாதவரை, திருமுண்டம் தீட்டாதவரைக் கண்டால் அஞ்சுகிறேன் என்று பாடியது அன்றைய சூழ்நிலையில் சற்றும் பொருந்துவதாக இல்லை. திருவாசகத்தின் பொதுப்போக்குக்கும் இந்தப் பத்துப் பாடல்கள் பொருந்துவதாயில்லை. s' இந்தச் சிந்தனை தோன்றிய பிறகு மேலும் சில தடை விடைகள் மனத்திடைத் தோன்றுகின்றன. இதுவரை வாலாயமாகப் பொருள் கூறிவந்த முறையில் இப் பாடல்களுக்குப் பொருள் கூறுவோமானால் மேலே கூறிய தடைகள் மனத்தை விட்டு நீங்குமாறில்லை. இந்தப் பத்துப் பாடல்களுக்கும் இதே வகையில் பொருள் கூறினால் திருவாசகத்தின் தனிச்சிறப்புக்குப் அது பொருந்து மாறில்லை. இப்படியானால் வேறுவழியென்ன? பாடியவரோ மாபெரும் கல்வியாளரும் உலக அனுபவம் நிறைந்தவரும்