பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 எவ்வாறிருந்தது என்று கூறும் பாடல்களே திருவாசகம் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். ஆனால், அச்சப்பத்து இந்த மூன்று நிலைகளிலும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. இதிலுள்ள பத்துப் பாடல்களிலும் இறைவன் திருவடிகளை நினைந்து உருகாதவர்களைக் கண்டால் அஞ்சுகிறேன் என்று பாடுகிறார். இரண்டு பாடல்களில் (520, 524 வெண்ணிறு அணியாதவர்களும் (520) திருமுண்டம் தீட்டாதவர்களும் (524) பிரித்து எடுத்துப் பேசப்பெறுகின்றனர். இரண்டு பாடல்களில் சிவபெருமானுடைய திருவடியைப் போற்றுவதை விட்டுப் பிற தெய்வங்களை நினைக்கின்றவர்களும் (51), பிறதெய்வங்களை நினைந்தவுடன் அருவருப்புக் கொள்ளா தவர்களும் (517) பிரித்தெடுத்துப் பேசப்பெறுகின்றனர். வெண்ணிறு அணிதல், திருமுண்டம் தீட்டுதல் என்பவை புறத்தே செய்யப்பெறும் செயல்களாகும். பிற தெய்வங்களைப் போற்றுபவர்கள், பிற தெய்வங்களை அருவருக்காதவர்கள் ஆகிய இருவருடைய செயல்களும் அவர்களுடைய மனநிலையைப் பொறுத்ததாகும். இந்த நான்கு பாடல்கள்தவிர, ஏனைய பாடல்களில் ஈசன் திருவடிக்கண் அன்பு செலுத்தி மனம் உருகி நிற்காதவர்கள் பேசப்பெறுகின்றனர். எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு சமயமும் எல்லா மக்களாலும் தழுவப்பட்டது என்று கூறுவதற்கில்லை. ஒரே சமயத்தைத் தழுவியதாகச் சொல்லிக்கொள்ளும் இஸ்லாமிய நாடுகள், மேலைநாடுகள் போன்றவற்றிலும் இந்த ஒரு சமயமே பல்வேறு கிளைகளாகப் பிரிந்து தம்முள் முரண்பட்டுப் போராடிவருவதைக் காண்கிறோம். மாபெரும் - கல்வியாளராகவும், அமைச்சராகவும் இருந்த ஒருவர் தாம் மேற்கொண்ட சைவசமயத்தைப் போற்றுவதில் எவ்விதத் தவறுமில்லை, சமயத்தின் புறப்