பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை : 433 இருக்கும்போது பாடப்பட்டதுதான் நான் பாவியனானால்’ என்ற தொடர். இறையனுபவமும், உள்ளத்து உணர்வும் கடல் அலைபோல் ஓங்கி மேலே வருகின்ற நிலையும், அடுத்த விநாடியில் அந்த நிலை மாறிச் சாதாரண நிலைக்கு வருவதும் அருளாளர்களுக்குப் பொது என்ற உண்மையை எடுத்துக்காட்ட ஒரே பதிகத்தில் வரும் இந்த இரண்டு தொடர்களும் உதவி புரிகின்றன. அச்சப் பத்து திருவாசகத்தில் எந்த ஒரு பதிகத்தையோ பாடலையோ 'சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து படிக்கும்பொழுது ஏற்படுகின்ற அனுபவம் தனித்தன்மை வாய்ந்தது. ஏனைய அருளாளர்கள் பாடல்களில் உள்ளத்தை உருக்கும் பாடல்கள் இவ்வளவு அதிகமாகக் காணப்பெறுவதில்லை. உள்ளத்தை உருக்கும் பாடல்கள் நிறைந்துள்ள திருவாசகத்தில் அச்சப் பத்து தனித்து நிற்கின்றது. இதில் எந்த ஒரு பாடலிலும் அன்பைப் பெருக்கும் வாய்ப்போ நெஞ்சை உருக்கும் இயல்போ இல்லை என்பது என்னுடைய கருத்தாகும். பக்தி அடிப்படையில் நின்ற பெரியோர்கள் அருளியவை அனைத்துமே ஈடு இண்ை யற்றவை, உயர்ந்தவை என்று கருதுவோர்கள் பலர் உண்டு. இந்த அடிப்படையை விட்டுவிட்டு, அருளாளர்கள் பாடல்களிலும் ஈடு இணையற்று உயர்ந்து நிற்பவை பல; இடைநிகர்த்த தன்மை உடையவை சில சாதாரண மானவை சில. இவ்வாறு பிரித்துப் பார்ப்பது சாதாரண மான மனிதர்களின் இயல்பாகும். இறையனுபவத்தில் மூழ்கித் திளைத்த அடிகளாரும் பல சமயங்களில் அவ்வனுபவத்திலிருந்து விடுபட்டு உலகியல் நிலைக்கு வந்து அந்த அனுபவத்தைத் திரும்பிப் பார்த்து அது