பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இதுவரை நூற்றுக்கணக்கான பாடல்களில் 'நீ உன்னை நல்கியே தீரவேண்டும். என் தகுதி பாராமல் ஆட்கொண்டதால் வற்புறுத்தும் உரிமை எனக்கு வந்து விட்டது என்ற கருத்துப்படப் பாடியவர், இந்த 515ஆம் பாடலில் உனை நல்காய்' என்று கேட்பதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பேசுகிறார். அதைவிட வியப்பு என்னவென்றால், நான் பாவியாக இருந்துகொண்டு, நீ உனை நல்காய்' என்று கேட்பது எப்படிப் பொருந்தும்’ என்று பேசுவதாகும். பெருந்துறை நாயகன் தம் வினைகளையும், மலங் களையும் சுட்டெரித்துவிட்டான். அவற்றைச் சுட்டெரித்து தனக்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக்கொண்டு அவ் வழியின் மூலமே தம்முள் புகுந்தான் என்றல்லவா நூற்றுக்கணக்கான பாடல்களில் பாடியுள்ளார்? இதே பதிகத்தில் 512ஆம் பாடலில் புறம்போகல் ஒட்டேன்’ என்று உறுதிப்பாட்டோடு கூறியவர், இரண்டு பாடல்கள் கழிந்தவுடன் நான் பாவியனானால் உனை நல்காய் எனலாமே என்று பாடுவது, ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியதாகும். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறானவை; முரண்பட்டவையும்கூட. ஒரே பதிகத்தில் இரண்டு பாடல்கள் பாடி முடிப்பதற்குள் இத்தகைய முரண்பாடு எப்படி வெளிப்பட்டது? ஆழ்ந்து நோக்கினால் இதில் முரண்பாடு ஏதும் இல்லை என்பது தெரியவரும். இவை இரண்டும் இரண்டு மனநிலைகளில் பாடப்பெற்றவை ஆகும். இறையனுபவத்தில் ஊறித் திளைத்து ஆழ்ந்து நிற்கும் நிலையில் புறம்போகல் ஒட்டேன்’ என்ற தொடர் வெளிப்பட்டது. அந்த நிலை முற்றிலும் மாறி, சாதாரண மனித மனநிலையில்