பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 431 உலகியலில் மிக்க ஆர்வத்தோடு ஒரு பொருளைத் தேடுகின்றவர்கள், நீண்ட காலம் அம்முயற்சியில் ஈடுபட்டால் பிறகு ஒரு நிலையில் அப்பொருள் எதிரே இருந்தாலுங்கூட அதனை அறிந்துகொள்ள முடியாமற் போய்விடும். மனித மனத்தின் குறைபாடுகளுள் இதுவும் ஒன்று. திருப்பெருந்துறையில் குருநாதர் வடிவிலிருந்த இறைவன் இவருட் புகுந்ததை இவர் நன்றாக அறிவார். அதனைப் பல முறை பல பாடல்களில் பாடியும் இருக்கிறார். அப்படி இருந்தும், ஒரு சில நேரங்களில் இவ்வுண்மை மறக்கப்படுகிறது. பிறகு, அது நினைவிற்கு வந்தவுடன் உள்ளேயுள்ள பொருளை, அது தன்னுள் இருக்கிறது என்ற கருத்தை மறந்துவிட்டு, வெளியே தேடிய செயலை நினைந்து ஒரளவு வருத்தமடைகிறார். உருவம் இல்லாத பொருள் உள்ளே புகுந்து மறைந்து கொண்டிருந்தால், அதை உணர்வதும் காண்பதும் கடினம். ஆனால், இவர் உள்ளத்தில் புகுந்த அவன் செச்சை மலர் புரைமேனியன் (514) ஆக உள்ளான். நாம ரூபம் கடந்த பொருளாகவுள்ள அவன், ஒரு வடிவை எடுத்துக் கொண்டல்லவா உள்ளே புகுந்தான்! அவன் எடுத்துக் கொண்ட வடிவம் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறம் பொருந்தியதாகவல்லவா (செச்சைமலர் புரை மேனியன்) இருந்தது! அப்படியிருந்தும் அவன் தம்முள் புகுந்ததையும் அங்கேயே தங்கிவிட்டதையும் அறியாமல் இருந்து விட்டதாக எனக்கு இருக்கின்றதை அறியேன்” என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். 50ஆம் பாடலில் கூடுமின் கலந்தே என்று ஒரு புதிய கருத்தை வெளியிட்டதுபோல 515 ஆம் பாடலில் மற்றுமொரு புதிய சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.