பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 445 முதல் ஆற்றல் காரணமாக எதிரே உள்ள குதிரைச் சேவகன் ஆலவாய்ச் சொக்கன்தான் என்பதை ஒரே விநாடியில் கண்டுகொண்டார். அதன் பயனாகவே ஐந்து பாடல்களில் குதிரைச் சேவகனின் திருவடிகளைப் பாடுகின்றார். இரண்டாவது ஆற்றல் பயன்பட்டதன் விளைவாக, தன் அருகில் இருக்கும் பாண்டி மன்னனின் எதிர்காலம் எத்தகையது என்பதை அறிந்ததோடு, அவனுக்கு மறுபிறப்பில்லை என்றும் பாடினார். அம்மட்டோடு இல்லாமல், எதிரே உள்ள குதிரைச்சேவகனை இனங்காண முடியாத பாண்டி மன்னனைக் குதிரைச் சேவகனாக வந்த சொக்கன் தடுத்து ஆட்கொண்டான் மறித்திடுமே) என்றும் கூறுகிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கருவிகள் மிக நுண்மையாக அமைந்துள்ளன. இவற்றை அந்தக்கரணங்கள் என்றும் கூறுவர். இவற்றுள் மனம் என்ற நுண்கருவி, ஒரளவு மூளையோடு தொடர்புடையது. கண்ணால் காண்கின்ற காட்சி, காதில் விழும் சொற்கள், மூக்கு உணரும் மணம், நா அறியும் சுவை, உடம்பு உணரும் தொடுஉணர்ச்சி ஆகியவை நரம்புகளின்வழிச் சென்று, மூளையிற் பதிந்து, அடுத்து நுண்மையாக உள்ள மனத்திரையில் படம்போல வந்துபோகின்றன. இவற்றில் எந்த ஒன்றும் நிலைத்து நிற்கும் இயல்புடையது அன்று. எனவே, மனத்திடைத் தோன்றும் காட்சிகளும் நீண்டு நிலைபெறாமல், அடுத்தடுத்து மறைந்துவிடுகின்றன. இவை மறையாமல் இருக்கவேண்டுமானால் சித்தத்தைச் சென்று தாக்கவேண்டும். அதிலும் இரண்டு பகுதிகள் உள்ளன. மேல் சித்தம், அடிச் சித்தம் என்ற இரண்டு பகுதிகளாக உள்ள சித்தத்தில் மனத்தில் படும் அத்தனை காட்சிகளும் வந்து படும் என்று சொல்வதற்கில்லை.