பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 443 திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆயிரக் கணக்கானவர்களை அவர் சந்தித்திருத்தல் கூடும். யாரையும் சென்றுகாணும் நிலை அவருக்கு ஏற்படவில்லை யென்றாலும், அவரை நாடிப் பலர் வந்திருத்தல்கூடும். அப்படி வந்தவர்களின் எதிர்காலம், அடிகளார் மனத் திரையில் படம்போல ஒடியிருக்கும் என்றாலும், அவரும் அதுபற்றிக் கவலைப்படவில்லை; எதிரே உள்ளவர் களிடமும் அதுபற்றிச் சொல்லியதாகத் தெரியவில்லை. திருப்பெருந்துறைக் குருநாதர் அருளிய இந்த இரண்டு ஆற்றல்களையும் முழுவதுமாகத் திருப்பாண்டிப் பதிகத்தில் அடிகளார் பயன்படுத்துகிறார். குதிரைச் சேவகனாக வந்தவன் யார் என்பதை அடிகளார் ஒருவர்மட்டுமே உணர்ந்ததோடு அறிந்தும் கொண்டார். மிக அணுக்கத்திலிருந்த பாண்டிய மன்னனிடம்கூட அவர் இந்த இரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. குதிரைச் சேவகனின் ஒப்பற்ற அழகிலும், அவன் கொண்டுவந்த குதிரைகளின் கம்பீரத்திலும் ஈடுபட்ட பாண்டியன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். ஆனால், இந்த அழகிய குதிரைச் சேவகனைச் சாதாரண மனிதனென்று நினைத்தானே தவிர வேறு எந்த எண்ணமும் அவனுடைய மனத்தில் தோன்றவில்லை. இப்பொழுது ஒரு நியாயமான வினாத் தோன்றலாம். குருநாதராக வந்தவரும், குதிரைச் சேவகனாக வந்தவனும் ஆலவாய்ச் சொக்கன்தான். குருநாதராக வந்தபொழுது அவரிடமிருந்து புறப்பட்ட தெய்விக அலைகள் அடிகளாரைப் பற்றி ஈர்த்தனவே- குதிரைச் சேவகனாக வந்தபோது அந்த அலைகள் பாண்டியனை ஏன் ஈர்க்கவில்லை? குதிரைச் சேவகனிடம் அந்த அலைகள் இல்லையா? இருந்திருந்தால், பாண்டியனைப் பற்றி ஈர்த்திருக்க வேண்டுமே என்று வினவினால் அதில்