பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 459 சில விநாடிகளில் ஒர் அற்புதம் நிகழ்ந்தது. சலன புத்தியுடையார் பலரும் மரமாக மாறி நின்றனர். அதாவது, அவர்களுடன் உடன்பிறந்த சலன புத்தி திடீரென ஒருநிலைப்பட்டு, குதிரையை மறந்து அந்தக் குதிரைச் சேவகனைப் பார்க்கும் ஒரே நிலையில் நின்று விட்டது. இது சலன புத்தியுடையாரின் செயலாகும். இதனையன்றி இயல்பாகவே மரம்போன்ற உறுதி கொண்ட நெஞ்சோடு உள்ள ஒரு சிலரும் அந்தக் குதிரைச் சேவகனைப் பார்த்தனர். என்ன அதிசயம்! அவனைப் பார்க்கின்றவரையில் உறுதிபடைத்த இவர்கள் மனத்தில் 'நான் வலுவாக நிலைபெற்றிருந்தது. ஆனால், பார்த்த வுடன் மரம்போன்ற உறுதிபடைத்த இவர்களுடைய நான்' ஒரே விநாடியில் எங்கோ சென்று மறைந்துவிட்டது. நான்' மறைந்ததுமட்டுமன்று, தாம் யார் என்பதையும் அவர்களே மறந்துவிட்டனர். 'கூற்றை வென்று என்று தொடங்கும் 535ஆம் பாடலுக்கு, முன்னர் கூறிய உரையே அல்லாமல் பின்வரும் முறையிலும் சிந்தனை செய்யலாம் என்று தோன்றுகிறது. இவ்வாறு செய்வதற்குப் பாடலில் காணும் சொற்களைப் பின்வருமாறு கொண்டுகட்டுச் செய்தல் நலம். 'பெருந்தேவியும் தானும் இருந்து, ஒர் மீனவன்பால் ஏற்றுவந்து, ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றைச்சேவகனே! (மீனவன்) கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று அழகால் வீற்றிருந்தான். தேற்றம் இலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே (535) என்றவாறு. உமையொருபாகனாக இருந்தும், அதே நேரத்தில் மீனவனாகிய பாண்டிய மன்னனின் ஆர் உயிர் (சீவபோதம்) உண்ட திறல் உடையவன் யார்? அவன் குதிரைமேல் வந்த ஒற்றைச் சேவகனே ஆவான். இந்த ஒற்றைச் சேவகன் பாண்டி