பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இன்றி உறுதியாக இருக்கும் நிலை, மூன்று, தம்மைத் தாம் மறந்த நிலை. இந்த மூன்று இயல்புகளும் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவானவையாகும். பூங்கொடியார் என்றதால் அசைந்து ஆடும் இயல்பு பேசப்பெறுகின்றது. உடனே இது பெண்களின் உடல் அசைவு என்று பொருள் பண்ண வேண்டிய தேவையில்லை. பூவைத் தாங்கிய கொடி, இங்குமங்குமாக அசைதலையும் மிக மெல்லிய காற்றுக்குக்கூட வேகமாக அசைதலையும் இயல்பாக உடையது. ஆனால், மரம் இவ்வாறு இல்லை. பொதுவாகக் காற்று மரத்தின் மேல்பகுதியிலுள்ள சிறு கிளைகளை அசைக்குமே தவிர அடிமரத்தை ஒன்றும் செய்வதில்லை. இந்த இரண்டு இயல்புகளையும் எல்லா மக்களுக்கும் பொதுவாக்கலாம். சாதாரண மக்கள் ஓயாது தாவிக் கொண்டிருக்கின்ற மனத்தை உடையவர்கள். சில வழிதுறைகளை மேற்கொண்டு ஆன்மீக உலகில் முன்னேறு கின்றவர்கள், இந்தச் சலனத்தில் ஈடுபடாமல், அடிமரம் போல் அசையாது நிற்கும் இயல்பைப் பெற்றுள்ளனர். இந்த இருவகை மக்களும் மதுரையம்பதியில் நிரம்பி இங்குமங்கும் நடந்துகொண்டிருக்கின்றனர். அரசன், குதிரையில் பவனி வருவதும், வசதி யுடையவர்களும் வீரர்களும் குதிரைமேல் அமர்ந்து சவாரி செய்வதும் மதுரை மக்களுக்கு அன்றாடக் காட்சிகளாகும். கொடிபோன்ற மனமுடையார், அதாவது, சலன புத்தி யுடையார் குதிரைமேல் இவர்ந்துசெல்லும் ஒவ்வொரு வரையும் பார்க்கும்போது 'அட்டா..! நாம் அந்தக் குதிரையின்மேல் இவர்ந்து செல்ல முடியவில்லையே’ என்று மாறிமாறி நினைப்பர். ஆனால், குதிரைச் சேவகனைப் பார்த்தவுடன் அந்தக் குதிரையின்மேல் ஏறிச்செல்லவேண்டும் என்ற ஆசை யாருக்கும் வரவில்லை. அதற்குப் பதிலாக அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும்