பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 457 இதே நிலைதான் தொடர்கிறது, தொடரப்போகிறது. ஆகவே, மனித மனத்தின் இயல்பை அறிந்த அடிகளார், வினை கடிந்து ஆனந்தத்து அழுத்தும் அவன் செயலை முதலிரண்டரை அடிகளில் கூறினார். இதனைப்பற்றிக் கவலைப்படுபவர்கள் அதிகம் இல்லையென்பதை உணர்ந்தோ என்னவோ பாடலை முடிப்பதற்குமுன், ஒன்றரை அடிகளில் பாண்டிய அரசு, உலகத்தையே ஆளும் அரசு என்ற இரண்டையும் கொடையாகத் தருவான்’ என்கிறார். நுண்மையான நகைச்சுவையோடு பாடுவதில் பழைய அமைச்சர் நன்கு பயின்றிருந்தார்போலும்! எனவே பாண்டிப்பிரான் தரும் இருவகைக் கொடைகளையும் அடுத்தடுத்துக் கூறிவிட்டு, பொதுவாகச் சென்று முந்து மினே' என்று முடித்துவிட்டார். அதாவது, திருவடிகளை விரும்புபவர்களும், முழுதுலகையும் ஆளவேண்டும் என்று விரும்புபவர்களும் சென்று முந்துங்கள் என்று முடிப்பதன் நோக்கம், எந்த வகையை மேற்கொண்டாலும் சரி அவனிடம் முந்துங்கள் என்று முத்தாய்ப்பாக வைக்கின்றார். ‘விரவிய தீவினை என்று தொடங்கும் 534ఖ பாடல் 'பூங்கொடியார் மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் என்று செல்கிறது. பூங்கொடியார் என்று வருவதால் வாலாயமாகப் பொருள்கொள்ளும் முறையில் மகளிர் என்று பொருள் கொண்டு, இப்பாடலை அகத்துறையாக்கிப் பார்ப்பதும் ஒரு முறை. - பூங்கொடியார் மரமாகிநின்று தம்மைத் தாம் மறந்தனர் என்பதால் மூன்று இயல்புகள் பேசப்பெறுகின்றன. அவையாவன: ஒன்று, கொடி போன்ற சலனபுத்தியுடைய நிலை; இரண்டு, மரம்போன்று மனத்தில் எவ்வித சலனமும் தி.சி.சி.IV 30