பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 நின்றது ஒர் ஆனந்த வெள்ளத்திடை அழுத்தும் (533) செயலைச் செய்வது விலையுயர்ந்த விளையாட்டுப் பொருள்களைத் தருவதுபோலாகும். இதன் எதிராகப் பாண்டிநாட்டு அரசைத் தந்து, அது போதாதென்று நினைப்பவர்க்கு முழுது உலகையும் (533) எவ்வித எதிர்பார்ப்புமின்றிக் கொடையாகத் தருவான். இது குழந்தை விளையாட தேர்ந்தெடுக்கும் இரண்டாவதுவகைப் பொருட்கள் போன்றனவாகும். அடிகளாருக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டு வாழ்ந்த கடுவன் இளவெயினனார் என்ற பக்தக் கவிஞர் திருப்பரங்குன்றத்து முருகனை வேண்டிப் பாடிய இரண்டு அடிகள் நினைவிற்கு வருகின்றன. இந்த இருவகைப் பொருள்களைத் தனித்தனியே விரும்புவோர் அந்தக் கவிஞர் காலத்திலேயே இருந்தனர்போலும், திருப்பரங்குன்றில் ஏறிச்சென்ற பக்தர்களோடு சென்ற கவிஞர் அங்கு வந்த பக்தர்கள் கேட்டவற்றை உணர்ந்து திடுக்குற்றார். அவரையல்லாத ஏனையோர் பலரும் மாடு, மனை, மக்கள், சுற்றம், செல்வம், பதவி ஆகியவற்றைப் பட்டியலிட்டுக் கேட்டார்களே தவிர, முருகன் திருவடியினிடத்து அன்புவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. இதனைப் பார்த்து மனம் நொந்துபோன கவிஞர், அவர்கள் போனபிறகு அதே முருகனைப் பார்த்து, யாம் நின்பால் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயே (பரிபாடல்: 5.78-81 ) என்று வேண்டிக்கொள்கிறான். எனவே, சங்ககாலத்திலிருந்து அடிகளார் காலம்வரை. இல்லை இன்றுவரை- இல்லையில்லை நாளையும்கூட