பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 455 நினையாதது ஒன்று நடந்தது; அது அவனுக்கு அப்பொழுது தெரியாது. என்ன அதிசயம்! அந்த விநாடிவரை மீனவன் ஆகிய அந்த மன்னன் சஞ்சிதம், பிராரத்துவம், ஆகாமியம் என்ற மூன்று வினைகளால் இறுக்கமாகக் கட்டப் பட்டிருந்தான். ஆனால், குதிரைச் சேவகனிடமிருந்து கடிவாளத்தை எந்த விநாடியில் மீனவன், தன் கையில் பெற்றானோ அந்த விநாடியே இந்த மூன்று கட்டுக்களிலிருந்தும் அவன் விடுபட்டான். இந்த விடுதலை அவன் நினையாதது; எதிர்பாராதது. ஒரு குதிரையின் கடிவாளம் இதனைச் செய்ய முடியுமா? கடிவாளம் இதனைச் செய்யமுடியாதுதான். ஆனால், அதனைத் தொட்டுக் கொடுத்தவன் ‘விச்சது இன்றியே விளைவு செய்பவன் திருவாச ம0 ஆயிற்றே. ஆதலால், கடிவாளத்தின் மூலமே மன்னனின் மூவினை களையும் பறித்துவிட்டான். இந்த அற்புதத்தையே அடிகளார் மாய வனப்பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும் போய் அறும் இப்பிறப்பு என்னும் பகைகள் (532) என்று பேசுகின்றார். உலகியலில் குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் ஒரு புதுமையைக் காணமுடியும். குழந்தையின் தந்தை விலையுயர்ந்த விளையாட்டுப் பொம்மைகளை வாங்கித் தந்திருப்பார், ஆனால், அவற்றைச் சிறிதும் சட்டை செய்யாமல் வீட்டிலுள்ள துடைப்பம், பழைய செருப்பு என்பவற்றை எடுத்துக்கொண்டு குழந்தை விளையாடத் தொடங்கிவிடும். மனிதர்களில் பலர் இந்த இயல்பிலிருந்து நீங்குவதே இல்லை. இறைவனிடம் இந்த இரண்டும் உள்ளன. அவையாவன கழிவுஇல் கருணையைக் காட்டி, கடிய வினை அகற்றி, பழ மலம் பற்று அறுத்து, அழிவு இன்றி