பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்று பாடுவதை அறிதல் நலம். இந்த நுண்ணிய கருத்தை அடிகளார் மாய வனப்பரி மேற்கொண்டு என்ற 532ஆம் பாடலில் நாடகப் பாணியில் வலியுறுத்துகின்றார். பரிமேல் அமர்ந்துள்ளான் ஒருவன். அந்தக் குதிரையும் பார்ப்பவர்கட்குக் கம்பீரமான காட்சியைத் தருகிறதே தவிர உண்மையில் அது குதிரையில்லை. வனத்திலுள்ள நரி இப்பொழுது பரியாகவுள்ளது. அதுமட்டுமா? நரியைப் பரியாக்கியவன் இவ்வாறு செய்துவிட்டு எங்கோ சென்று மறைந்துவிடவில்லை, அந்தப் பரியின்மேலேயே அமர்ந்து உள்ளான். பாண்டியனிடத்துக் குதிரைகளை விற்றதற்கு அடையாளமாக, ஒரு குதிரையின் கடிவாளத்தைக் கயிறுமாறிப் பாண்டியனிடம் தந்தான். அப்பொழுது பாண்டியன் என்ன நினைத்தான்? தமிழகத்தில் வேறு எந்த மன்னனுக்கும் இப்படிப்பட்ட கம்பீரமான குதிரைகள் கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லை என்று நினைத்துப் பெருமையடைந்தான். அவன் நினைத்தது முற்றிலும் சரியே. நரிகளெல்லாம் பரிகளாகி இவனிடம் வந்து சேர்ந்தன. வேறு எந்தத் தமிழ் மன்னனிடம் இப்படிப்பட்ட குதிரைகள் வந்தன. ஆகவே, அவன் பெருமிதம் அடைந்தது சரி. உண்மை தெரிந்திருந்தால் இதில் பெருமிதம் கொண்டிருக்க மாட்டான். ஆனால், குதிரைச் சேவகனிடமிருந்து மாற்றப்பட்ட கடிவாளத்தைப் பாண்டியன் பெற்றுக்கொண்டபோது மற்றோர் அற்புதமும் நிகழ்ந்தது. அவன் நினைத்தது பொய் யாயிற்று; நினையாதது நடந்துவிட்டது. அவன் நினைத்தது என்ன? அற்புதமான குதிரைகளைப் பெற்றோம் என்பதே யாகும். ஆனால், அன்றிரவே அவையனைத்தும் நரிகளாக ஆனமையால் அவன் நினைத்தது நடக்கவில்லை. என்றால்,