பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 453 சொல்லைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு அடிகளார் 'மீனவன்' என்ற சொல்லைப் பயன்படுத்தி அரசனைக் குறிப்பிடுகின்றார். தமிழகத்தில் தோன்றிய சைவம், வைணவம் இரண்டும் மிகப் பழங்காலத்தொட்டே வினைக் கொள்கையை ஒரளவு ஏற்றுக்கொண்டிருந்தன. ஆனால், சமணம், பெளத்தம் என்ற இரண்டும் கடவுட்கொள்கையை ஏற்காததால் வினைக் கொள்கைக்கு முதலிடம் தந்தன. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் (சிலம்பு பதிகம்57) என்று சிலப்பதிகாரப் பதிகம் பேசுகிறது. சிலப்பதிகாரப் பதிகம் இளங்கோவடிகள் பாடியதன்று என்றாலும், நூலின் உள்ளேயும் வினைக்கொள்கை வலுவாக இடம்பெறுகிறது. ஆனால் சைவ, வைணவர்களைப் பொறுத்தமட்டில் வினைக்கொள்கையின் தாக்கம் எவ்வளவு ஆழமாக இருப்பினும், கடவுட் தத்துவத்தை வினைக்கொள்கைக்கு மேலே வைத்து, இறைவனை விஞ்சியது எதுவுமில்லை என்ற முடிவிற்கு வந்தனர். இந்த அடிப்படையில்தான், குன்றே அனைய குற்றங்களைக் குணமெனக் கொண்டு அவன் மன்னிப்பான் என்று அடிகளார்போன்றவர்கள் பேசினார்கள், வைணவ சமயத்தில் விஷ்ணு வழிபாட்டில் ஆழங்கால்பட்டுநின்ற ஆண்டாள் அம்மையாரும் தம் திருப்பாவையில் இக் கருத்தை வலியுறுத்திப் பாடுகின்றார். திருப்பாவையின் ஐந்தாவது பாடலில், துயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்